பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி

பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி (FIFA Confederations Cup) ] தேசிய அணிகளுக்கிடையே பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் நடத்தப்படும் பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். தற்போது ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.பிபா அமைப்பின் கீழ் ஒவ்வொரு கண்டத்திற்கும் அமைக்கப்பட்டுள்ள ஆறு கூட்டமைப்புக்களின் (ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம், தென் அமெரிக்க கூட்டமைப்பு, வடக்கு மத்திய கரீபியன் கூட்டமைப்பு, ஆபிரிக்க கூட்டமைப்பு, ஆசிய கூட்டமைப்பு, ஓசியானா கூட்டமைப்பு), போட்டிகளில் வென்ற அணிகள், உலகக்கோப்பை வென்ற அணி மற்றும் போட்டி நடத்தும் நாட்டின் அணி என எட்டு அணிகள் பங்கேற்கின்றன.

பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை
தோற்றம்1992
அணிகளின் எண்ணிக்கை8
தற்போதைய வாகையாளர் பிரேசில் (4வது முறை)
அதிக முறை வென்ற அணி பிரேசில் (4 முறைகள்)
இணையதளம்அலுவல்முறை வலைத்தளம்
2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை

2005ஆம் ஆண்டிலிருந்து எந்த நாட்டில் உலகக்கோப்பைப் போட்டிகள் வரும் ஆண்டில் நடக்க உள்ளதோ, அதே நாட்டில் முந்தைய ஆண்டு நடத்தப்படுகிறது; இது உலகக்கோப்பை போட்டிகளை நடத்த ஒரு ஒத்திகையாக அமைகிறது. 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை போட்டியை சூன் 15 முதல் சூன் 30 வரை நடத்திய பிரேசில் இறுதி ஆட்டத்தில் எசுப்பானியாவை 3–0 என்ற கணக்கில் தோற்கடித்து கோப்பையை வென்றது.

வரலாறு தொகு

 
2005ஆம் ஆண்டு நடந்த பிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியாட்டமொன்றில் செருமனியும் பிரேசிலும் செருமனியின் நியூரம்பெர்க்கிலுள்ள கிரன்டிக் விளையாட்டரங்கில் மோதுதல்
 
பிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பையில் சிறந்த முறையில் விளையாடிய நாடுகளும் (வகைப்படுத்தும் வண்ணங்களுடன்) நடத்திய நாடுகளும் (மஞ்சள் புள்ளிகள்).

இந்தப் போட்டிகள் துவக்கத்தில் சவூதி அரேபியாவால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது; இதனை அரசர் ஃபாட் கோப்பை (கூட்டமைப்புகளில் வென்றோர் கோப்பை அல்லது கண்டங்களிடை போட்டி) என அழைத்தனர். 1992இலும் 1995இலும் சவூதி அரேபிய தேசிய அணியும் கூட்டமைப்பு போட்டிகளில் வென்ற அணியினரும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டனர். 1997இல் இந்தப் போட்டியை ஒருங்கிணைக்கும் பொறுப்பை பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டது. ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பை என்ற பெயரில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டியை நடத்தி வந்தனர்.[1]

2005ஆம் ஆண்டு முதல் இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றது. ஒவ்வொரு உலகக் கோப்பைக்கும் முந்தைய ஆண்டில் எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகளை ஏற்று நடத்தவுள்ள நாடு இதனை நடத்தும் பொறுப்பை பெறுகின்றது. உலகக்கோப்பைக்கு ஒரு ஒத்திகையாகக் கருத்தப்படும் இந்தப் போட்டிகள் உலகக்கோப்பைக்காக தயார் செய்யப்பட்ட விளையாட்டரங்கங்களின் எண்ணிக்கையில் பாதியை பயன்படுத்துகின்றன. இதனால் ஏற்று நடத்தும் நாட்டிற்கு உயர்நிலைப் போட்டிகளை நடத்தும் பட்டறிவு கிடைக்கின்றது. தென்னமெரிக்க, ஐரோப்பிய வாகையாளர் அணிகள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வது விருப்பத்தேர்வாக உள்ளது.[2]

முடிவுகள் தொகு

அரசர் ஃபாட் கோப்பை தொகு

ஆண்டு நடத்திய நாடு வெற்றியாளர் புள்ளிகள் இரண்டாவது மூன்றாவது புள்ளிகள் நான்காவது கலந்து கொண்டவை
1992   சவூதி அரேபியா [upper-alpha 1]  
அர்கெந்தீனா
3–1  
சவூதி அரேபியா
 
ஐக்கிய அமெரிக்கா
5–2  
ஐவரி கோஸ்ட்
4
1995   சவூதி அரேபியா [upper-alpha 1]  
டென்மார்க்
2–0  
அர்கெந்தீனா
 
மெக்சிக்கோ
1–1 (கூ.நே.)
(5–4p)
 
நைஜீரியா
6
  1. 1.0 1.1 The first two editions were in fact the defunct King Fahd Cup. FIFA later recognized them retroactively as Confederations Cups; see tournament archive.

பிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பை தொகு

ஆண்டு நடத்திய நாடு வெற்றியாளர் புள்ளிகள் இரண்டாவது மூன்றாமிடம் புள்ளிகள் நான்காமிடம் கலந்து கொண்டவை
1997   சவூதி அரேபியா  
பிரேசில்
6–0  
ஆத்திரேலியா
 
செக் குடியரசு
1–0  
உருகுவை
8
1999   மெக்சிக்கோ  
மெக்சிக்கோ
4–3  
பிரேசில்
 
ஐக்கிய அமெரிக்கா
2–0  
சவூதி அரேபியா
8
2001   தென் கொரியா
  சப்பான்
 
பிரான்சு
1–0  
சப்பான்
 
ஆத்திரேலியா
1–0  
பிரேசில்
8
2003   பிரான்சு  
பிரான்சு
1–0 (கூ.நே.)  
கமரூன்
 
துருக்கி
2–1  
கொலம்பியா
8
2005   செருமனி  
பிரேசில்
4–1  
அர்கெந்தீனா
 
செருமனி
4–3 (கூ.நே.)  
மெக்சிக்கோ
8
2009   தென்னாப்பிரிக்கா  
பிரேசில்
3–2  
ஐக்கிய அமெரிக்கா
 
எசுப்பானியா
3–2 (கூ.நே.)  
தென்னாப்பிரிக்கா
8
2013   பிரேசில்  
பிரேசில்
3–0  
எசுப்பானியா
 
இத்தாலி
2–2 (கூ.நே.)
(3–2p)
 
உருகுவை
8
2017   உருசியா 8

மேல் நான்கிடங்களுக்கு எட்டிய அணிகள் தொகு

அணி வெற்றியாளர் இரண்டாமிடம் மூன்றாமிடம் நான்காமிடம்
  பிரேசில் 4 (1997, 2005, 2009, 2013*) 1 (1999) 1 (2001)
  பிரான்சு 2 (2001, 2003*)
  அர்கெந்தீனா 1 (1992) 2 (1995, 2005)
  மெக்சிக்கோ 1 (1999*) 1 (1995) 1 (2005)
  டென்மார்க் 1 (1995)
  ஐக்கிய அமெரிக்கா 1 (2009) 2 (1992, 1999)
  ஆத்திரேலியா 1 (1997) 1 (2001)
  எசுப்பானியா 1 (2013) 1 (2009)
  சவூதி அரேபியா 1 (1992*) 1 (1999)
  சப்பான் 1 (2001*)
  கமரூன் 1 (2003)
  செக் குடியரசு 1 (1997)
  துருக்கி 1 (2003)
  செருமனி 1 (2005*)
  இத்தாலி 1 (2013)
  உருகுவை 2 (1997, 2013)
  ஐவரி கோஸ்ட் 1 (1992)
  நைஜீரியா 1 (1995)
  கொலம்பியா 1 (2003)
  தென்னாப்பிரிக்கா 1 (2009*)
*: போட்டி நடத்தியவர்கள்

மேற்சான்றுகள் தொகு

  1. "FIFA Confederations Cup" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-06-10.
  2. "2005/2006 season: final worldwide matchday to be 14 May 2006". பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு. 19 December 2004 இம் மூலத்தில் இருந்து 26 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150426221112/http://www.fifa.com/aboutfifa/organisation/news/newsid=95756/index.html. பார்த்த நாள்: 6 January 2012. 

வெளி இணைப்புகள் தொகு