இத்தாலி தேசிய காற்பந்து அணி
இத்தாலியத் தேசியக் கால்பந்து அணி (இத்தாலியம்: Nazionale italiana di calcio), பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் இத்தாலியின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை இத்தாலியில் காற்பந்தாட்டங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்பான இத்தாலியக் கால்பந்துக் கூட்டமைப்பு (FIGC), மேற்பார்க்கின்றது. உலகின் சிறந்த காற்பந்து அணிகளில் ஒன்றாக இத்தாலி கருதப்படுகிறது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே பிரேசிலுக்கு (5) அடுத்தபடியாக 4 கோப்பைகளை (1934, 1938, 1982, 2006) வென்றுள்ளது. தவிர இருமுறை இறுதியாட்டத்திலும் (1970, 1994), ஒருமுறை மூன்றாமிடத்திலும் (1990) ஒருமுறை நான்காமிடத்திலும் (1978) வந்துள்ளது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் 1968இல் வெற்றி கண்டுள்ளனர். இருமுறை இறுதியாட்டத்தை எட்டியுள்ளனர் (2000, 2012). கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1936இல் வெற்றி கண்டுள்ளனர். இரண்டு மத்திய ஐரோப்பிய பன்னாட்டுக் கோப்பைகளையும் வென்றுள்ளனர். பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் 2013 ஆம் ஆண்டில் மூன்றாமிடத்தை அடைந்தனர்.
அடைபெயர் | Gli Azzurri(The Blues) | |||
---|---|---|---|---|
கூட்டமைப்பு | Federazione Italiana Giuoco Calcio (FIGC) | |||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | |||
தலைமைப் பயிற்சியாளர் | செசாரெ பிரான்டெலி | |||
அணித் தலைவர் | கியான்லுயிகி பஃபொன் | |||
Most caps | கியான்லுயிகி பஃபொன் (138) | |||
அதிகபட்ச கோல் அடித்தவர் | லூயிகி ரிவா (35) | |||
பீஃபா குறியீடு | ITA | |||
பீஃபா தரவரிசை | 7 | |||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 1 (நவம்பர் 1993, பெப்ரவரி 2007, ஏப்ரல்–சூன் 2007, செப்டம்பர் 2007) | |||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 16 (ஏப்ரல் 1998, அக்டோபர் 2010) | |||
எலோ தரவரிசை | 11 | |||
அதிகபட்ச எலோ | 1 (சூன் 1934 – மார்ச் 1940, திசம்பர் 1940 – நவம்பர் 1945, சூலை–ஆகத்து 2006) | |||
குறைந்தபட்ச எலோ | 21 (நவம்பர் 1959) | |||
| ||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||
இத்தாலி 6–2 பிரான்சு (மிலன், இத்தாலி; 15 மே 1910) | ||||
பெரும் வெற்றி | ||||
இத்தாலி 9–0 ஐக்கிய அமெரிக்கா (பிரென்ட்போர்டு, இங்கிலாந்து; 2 ஆகத்து 1948) | ||||
பெரும் தோல்வி | ||||
அங்கேரி 7–1 இத்தாலி (புடாபெஸ்ட், அங்கேரி; 6 ஏப்ரல் 1924) | ||||
உலகக் கோப்பை | ||||
பங்கேற்புகள் | 18 (முதற்தடவையாக 1934 இல்) | |||
சிறந்த முடிவு | வாகையர், 1934, 1938, 1982, 2006 | |||
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி | ||||
பங்கேற்புகள் | 8 (முதற்தடவையாக 1968 இல்) | |||
சிறந்த முடிவு | வாகையர், 1968 | |||
கூட்டமைப்புகள் கோப்பை | ||||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2009 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்) | |||
சிறந்த முடிவு | மூன்றாமிடம், 2013 | |||
Honours |
தேசிய கால்பந்து அணி "அஸூரி" (வெளிர் நீலம்) என்று அழைக்கப்படுகின்றனர். இத்தாலியின் தேசிய அணிகளும் விளையாட்டாளர்களும் மரபுவழியே இந்த நீல வண்ணச் சட்டைகளை அணிவதால் இப்பெயர் எழுந்தது. இந்த அணிக்கு மற்ற தேசிய அணிகளைப் போல தன்னக விளையாட்டரங்கம் எதுவும் இல்லை.