1938 உலகக்கோப்பை காற்பந்து

1938 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1938 பிஃபா உலகக்கோப்பை (1938 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் மூன்றாவது பதிப்பாகும். இப்போட்டிகள் பிரான்சில் 1938 சூன் 4 முதல் சூன் 19 வரை நடைபெற்றன. இறுதிப் போட்டியில் அங்கேரியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தாலி தனது பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இத்தாலியின் 1934 மற்றும் 1938 அணிகள் ஒரே பயிற்சியாளரான விட்டோரியோ போசோவின் கீழ் பலமுறை உலகக் கோப்பையை வென்ற ஒரே ஆண்கள் தேசிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளன. இரண்டாம் உலகப் போரின் இடையூறு காரணமாக 1950 வரை இது கடைசி உலகக் கோப்பையாக இருந்தது.[1]

1938 பிஃபா உலகக்கோப்பை
FIFA World Cup
Coupe du Monde
பிரான்சு 1938
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுFrance
நாட்கள்4–19 சூன் 1938
அணிகள்15 (4 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)10 (9 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் இத்தாலி (2-ஆம் தடவை)
இரண்டாம் இடம் அங்கேரி
மூன்றாம் இடம் பிரேசில்
நான்காம் இடம் சுவீடன்
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்18
எடுக்கப்பட்ட கோல்கள்84 (4.67 /ஆட்டம்)
பார்வையாளர்கள்3,74,835 (20,824/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) லியோனிதாசு (7 இலக்குகள்)
1934
1950

தகுதி பெற்ற அணிகள்

தொகு

பின்வரும் 16 அணிகள் முதலில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இருப்பினும், 1938 மார்ச் 13 இல் ஆத்திரியா செருமனியுடன் இணைக்கப்பட்டதன் காரணமாக ஆத்திரியா போட்டியில் இருந்து வெளியேறியதால்[2][3] 15 அணிகள் மட்டுமே பங்கேற்றன.

இறுதிச் சுற்று

தொகு
16 அணிகளின் சுற்று கால் இறுதி அரை இறுதி இறுதி
                           
5 சூன் – மர்சேய்            
   இத்தாலி (கூ.நே)  2
12 சூன் – கொலம்பசு
   நோர்வே  1  
   இத்தாலி  3
5 சூன் – கொலம்பசு
     பிரான்சு  1  
   பிரான்சு  3
16 சூன் – மர்சேய்
   பெல்ஜியம்  1  
   இத்தாலி  2
5 சூன் – இசுத்திராசுபுர்க்
     பிரேசில்  1  
   பிரேசில் (கூ.நே)  6
12 & 14 சூன் – போர்டோ
   போலந்து  5  
   பிரேசில்  1 (2)
5 சூன் – லெ ஆவர்
     செக்கோசிலோவாக்கியா  1 (1)  
   செக்கோசிலோவாக்கியா (கூ.நே)  3
19 சூன் – கொலம்பசு
   நெதர்லாந்து  0  
   இத்தாலி  4
5 சூன் – ரெயிம்சு
     அங்கேரி  2
   அங்கேரி  6
12 சூன் – லில்லி
   இந்தோனேசியா  0  
   அங்கேரி  2
4 & 9 சூன் – பாரிசு
     சுவிட்சர்லாந்து  0  
   சுவிட்சர்லாந்து  1 (4)
16 சூன் – பாரிசு
   செருமனி  1 (2)  
   அங்கேரி  5
5 சூன் – லியோன்
     சுவீடன்  1   மூன்றாம் இடம்
   சுவீடன்  -[a]
12 சூன் – ஆன்டிபசு 19 சூன் – போர்டோ
   ஆஸ்திரியா    
   சுவீடன்  8    பிரேசில்  4
5 & 9 சூன் – தவ்லூசு
     கியூபா  0      சுவீடன்  2
   கியூபா  3 (2)
   உருமேனியா  3 (1)  

குறிப்புகள்

தொகு
  1. மார்ச் 1938 இல் ஆத்திரிய-செருமனி இணைப்பு காரணமாக ஆத்திரியாவால் போட்டியிட முடியாததால் சுவீடன் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது.

மேற்கோள்கள்

தொகு
  1. "History". FIFAWorldCup.com. Archived from the original on 20 March 2007. பார்க்கப்பட்ட நாள் 14 June 2014.
  2. Ashdown, John (22 April 2014). "World Cup: 25 stunning moments … No11: Austria's Wunderteam". The Guardian. https://www.theguardian.com/football/blog/2014/apr/22/world-cup-stunning-moments-austria-wunderteam. 
  3. "History of the World Cup Final Draw" (PDF). Archived from the original (PDF) on 26 February 2008. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பிரான்சு 1934
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1938_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=3607247" இலிருந்து மீள்விக்கப்பட்டது