போலந்து தேசிய காற்பந்து அணி

போலந்து தேசிய காற்பந்து அணி (Poland national football team; ), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் போலந்து நாட்டின் சார்பில் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, போலந்து நாட்டின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான போலந்து கால்பந்துச் சங்கம் மேலாண்மை செய்கிறது. இவ்வணியின் விளையாட்டரங்கம், வார்சா நகரில் உள்ள தேசிய விளையாட்டரங்கம் ஆகும்.

 போலந்து
Shirt badge/Association crest
அடைபெயர்Biało-czerwoni (The white and reds)
Białe Orły
(The White Eagles)
கூட்டமைப்புPolski Związek Piłki Nożnej (PZPN)
கண்ட கூட்டமைப்பு ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தலைமைப் பயிற்சியாளர்Adam Nawałka
அணித் தலைவர்Jakub Błaszczykowski
Most capsMichał Żewłakow (102)
அதிகபட்ச கோல் அடித்தவர்Włodzimierz Lubański (48)
தன்னக விளையாட்டரங்கம்தேசிய விளையாட்டரங்கம், வார்சா
பீஃபா குறியீடுPOL
பீஃபா தரவரிசை70
அதிகபட்ச பிஃபா தரவரிசை16 (செப்டம்பர் 2007)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை78 (நவம்பர் 2013)
எலோ தரவரிசை53
அதிகபட்ச எலோ1 (அக்டோபர் 1975)
குறைந்தபட்ச எலோ55 (ஆகத்து 1956, ஏப்ரல் 1998)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 அங்கேரி 1–0 போலந்து 
(Budapest, அங்கேரி; 18 December 1921)
பெரும் வெற்றி
 போலந்து 10–0 சான் மரீனோ 
(Kielce, போலந்து; 1 April 2009)
பெரும் தோல்வி
 டென்மார்க் 8-0 போலந்து 
(கோபனாவன், Denmark; 26 June 1948)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்7 (முதற்தடவையாக 1938 இல்)
சிறந்த முடிவுமூன்றாமிடம் (1974, 1982)
யூரோ
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2008 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்று, 2008 மற்றும் 2012
வென்ற பதக்கங்கள்
Men's Football
தங்கப் பதக்கம் – முதலிடம் 1972 Munich Team
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1976 Montreal Team
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1992 Barcelona Team

70-களில் இருந்த போலந்து அணியே, இதுநாள்வரையிலான சிறந்த போலந்து அணியாகும். 1974 மற்றும் 1982 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் மூன்றாம் இடம் பெற்றது. 1972-ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடைபெற்ற கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது. மேலும், 1976 (மான்டிரியோல்) மற்றும் 1992 (பார்செலோனா) கோடை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு, முதன்முறையாக 2008-இல் தகுதிபெற்றது. மேலும், 2012-ஆம் ஆண்டில் உக்ரைன்-உடன் சேர்ந்து ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை நடத்தியதன் காரணமாக, போட்டிக்கு நேரடித் தகுதிபெற்றது. இவ்விரு போட்டிகளின் குழுநிலைகளிலும் கடைசி இடத்தையே போலந்து அணி பிடித்தது.

குறிப்புதவிகள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு