டென்மார்க் தேசிய காற்பந்து அணி

டென்மார்க் தேசிய காற்பந்து அணி (Denmark national football team, டேனிய மொழி: Danmarks fodboldlandshold) என்பது பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் டென்மார்க்கின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, டென்மார்க்கு கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இவ்வணியின் உள்ளக விளையாட்டுகள் கோபனாவன் நகரில் அமைந்துள்ள தேலியா அரங்கில் நடத்தப்படுகின்றன.

டென்மார்க்
அடைபெயர்De Rød-Hvide (சிவப்பு-வெள்ளை)
டேனிசு டைனமைட்
கூட்டமைப்புடேனிசு கால்பந்து சங்கம்
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்
தன்னக விளையாட்டரங்கம்தேலியா அரங்கு
பீஃபா குறியீடுDEN
பீஃபா தரவரிசை12 (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை3 (மே 1997, ஆகத்து 1997)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை51 (ஏப்ரல் 2017)
எலோ தரவரிசை18 (20 ஏப்ரல் 2018)
அதிகபட்ச எலோ1 (சூன் முதல் அக்டோபர் 1916 வரை)
குறைந்தபட்ச எலோ65 (மே 1967)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 டென்மார்க் 9–0 பிரான்சு 
(இலண்டன், 19 அக்டோபர் 1908)
பெரும் வெற்றி
 டென்மார்க் 17–1 பிரான்சு 
(இலண்டன்; 22 அக்டோபர் 1908)
பெரும் தோல்வி
 செருமனி 8–0 டென்மார்க் 
(பிரெசுலாவ், செருமனி; 16 மே 1937)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்5 (முதற்தடவையாக 1986 இல்)
சிறந்த முடிவுகாலிறுதி, 1998
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்8 (முதற்தடவையாக 1964 இல்)
சிறந்த முடிவுவாகையாளர், 1992
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 1995 இல்)
சிறந்த முடிவுவாகையாளர், 1995

டென்மார்க் அணி 1908, 1912, 1960 கோடை ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. 1986 ஆம் ஆண்டு வரை உலகக் கோப்பைகளில் விளையாடத் தகுதி பெறவில்லை.[1]

1992 இல் ஐரோப்பியப் போட்டிகளில் பங்குபற்றி வாகை சூடியது. சுவீடனில் நடைபெற்ற இப்போட்டிகளில் நெதர்லாந்து அணியை அரையிறுதியிலும், செருமனி அணியை இறுதிப் போட்டியிலும் வென்றது. 1995 யூஏஎஃப்ஏ கூட்டமைப்புகளின் கோப்பையை அர்ஜென்டீனாவுக்கு எதிராக விளையாடி வென்றது. 1999 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் காலிறுதியில் 3–2 என்ற கணக்கில் பிரேசிலிடம் தோற்றது.

தற்போதைய அணி

தொகு
  • கஸ்பர் சிமைக்கெல்
  • யோனஸ் லொசில்
  • பிரடரிக் ரொனாவ்
  • யனிக் வெஸ்டகோ
  • சிமொன் கியே
  • யோனஸ் க்னுசென்
  • அன்ட்ரெயாஸ் கிறிஸ்டென்சென்
  • மத்தியாஸ் யோன்சென்
  • என்ரிக் டால்ஸ்கோ
  • யென்ஸ் ஸ்ட்ரூயர் லாசென்
  • தோமாஸ் டெலேனெய்
  • கிறிஸ்டியன் எரிக்சென்
  • விக்டர் ஃபிஷர்
  • லூக்காஸ் லேராகர்
  • லசெ ஷோனே
  • பியோனே சிஸ்தோ
  • நிக்கோலாய் யோன்சென்
  • மாட்டின் பிரெய்த்வெய்த்
  • கஸ்பர் டொல்பே
  • யுசுஃப் பொவுல்சென்
  • அன்ட்ரேயஸ் கொணேலியுஸ்

மேற்கோள்கள்

தொகு
  1. Birger B. Peitersen (2003). "Danish Football" (PDF). Royal Danish Ministry of Foreign Affairs in collaboration with Danmark's Nationalleksikon. Archived from the original (PDF) on 12 சூன் 2011.

வெளி இணைப்புகள்

தொகு