பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி

பெல்ஜியம் தேசிய கால்பந்து அணி (Belgium national football team, டச்சு: Het Belgisch voetbalelftal; பிரெஞ்சு மொழி: L'équipe de Belgique de football; இடாய்ச்சு மொழி: Die Belgische Fußballnationalmannschaft) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பெல்ஜியம் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். 1904ஆம் ஆண்டில் எவென்சு கொப்பெ கோப்பைப் போட்டிகளிலிருந்து இந்த அணி ஆடி வருகிறது. இதனை பெல்ஜியத்தில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தி வரும் பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் மேற்பார்த்து வருகின்றது. 1895இல் நிறுவப்பட்ட பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகவும் பழமையானதொரு கால்பந்துச் சங்கமாகும். இந்த அணியின் தன்னக விளையாட்டரங்கமாக பிரசெல்சு நகரில் உள்ள மன்னர் பவுடூயின் விளையாட்டரங்கம் விளங்குகிறது. தேசிய அணியின் மேலாளராக மார்க் வில்மோட்சு உள்ளார். இந்த அணியினரை சிவப்புப் பேய்கள் (டச்சு: Rode Duivels ; பிரெஞ்சு மொழி: Diables Rouges; இடாய்ச்சு மொழி: Rote Teufel) எனக் குறிப்பிடுகின்றனர்.

பெல்ஜியம்
Shirt badge/Association crest
அடைபெயர்ரோடு டுயிவெல்சு
டயபெல்சு ரூஜ்
ரோட் டுஃபெல்
(சிவப்பு பேய்கள்)
கூட்டமைப்புபெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் (KBVB/URBSFA)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்மார்க் வில்மோட்சு[1][2]
துணைப் பயிற்சியாளர்வைடல் போர்கெல்மான்சு[3]
அணித் தலைவர்வின்சென்ட் கொம்பனி[4]
Most capsயான் செயுல்மான்சு (96)[5]
அதிகபட்ச கோல் அடித்தவர்பெர்னார்டு வூர்ஃகோஃப் (30)[5]
Paul Van Himst (30)[5]
தன்னக விளையாட்டரங்கம்மன்னர் பவுடூயின் விளையாட்டரங்கம்
பீஃபா குறியீடுBEL
பீஃபா தரவரிசை2[6] Green Arrow Up Darker.svg 1
அதிகபட்ச பிஃபா தரவரிசை2 (சூன் 2015)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை71 (சூன் 2007)
எலோ தரவரிசை18[7] Green Arrow Up Darker.svg 5
அதிகபட்ச எலோ2 (செப்டம்பர் 1920[8])
குறைந்தபட்ச எலோ74 (செப்டம்பர் 2009[8])
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
பெல்ஜியம் பெல்ஜியம் எவென்சு கொப்பெ கிண்ணம் (3–3) பிரான்சு 
(பிரசெல்சு, பெல்ஜியம்; 1 மே 1904)
பெரும் வெற்றி
பெல்ஜியம் பெல்ஜியம் 9–0 சாம்பியா 
(பிரசெல்சு, பெல்ஜியம்; 4 சூன் 1994)
பெல்ஜியம் Belgium 10–1 சான் மரீனோ 
(பிரசெல்சு, பெல்ஜியம்; 28 பெப்ரவரி 2001)
பெரும் தோல்வி
இங்கிலாந்து இங்கிலாந்து அமெச்சூர்கள் 11–2 பெல்ஜியம் பெல்ஜியம்
(இலண்டன், இங்கிலாந்து; 17 ஏப்ரல் 1909)[note 1]
உலகக் கோப்பை
பங்கேற்புகள்12 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுநான்காமிடம், 1986
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1972 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 1980

பன்னாட்டுப் போட்டிகளில் பெல்ஜியம் அணியின் சிறந்த சாதனையாக உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் விளையாட ஆறுமுறை, 1982 - 2002, தகுதி பெற்றதும் 1986 உலகக்கோப்பையில் நான்காமிடத்தை எட்டியதும் ஆகும். மேலும் 1980ஆம் ஆண்டு யூரோ கோப்பையில் இரண்டாவதாகவும் 1920ம் ஆண்டு ஒலிம்பிக்சில் சொந்த மண்ணில் தங்கப் பதக்கம் வென்றதும் ஆகும். மற்றக் குறிப்பிடத்தக்க வெற்றிகளாக உலக்க் கோப்பை வாகையர்களை நான்கு முறை வீழ்த்தியதைக் குறிப்பிடலாம்: 1954இல் 2–0 என்ற கணக்கில் மேற்கு செருமனியையும், 1963இல் 5–1 என்ற கணக்கில் பிரேசிலையும் , 1982இல் 1–0 என்ற கணக்கில் அர்கெந்தீனாவையும் 2002இல் 2–1 என்ற கணக்கில் பிரான்சையும் வீழ்த்தி உள்ளனர்.[9]

மேற்சான்றுகள்தொகு

  1. D., M.; Lagae, Bart (15 மே 2012). "Marc Wilmots voorlopig interim-bondscoach" (in Dutch). De Standaard. http://www.standaard.be/cnt/DMF20120515_070. 
  2. M., Jan (6 சூன் 2012). "Marc Wilmots is nieuwe bondscoach tot 2014" (in Dutch). De Standaard. http://www.standaard.be/cnt/DMF20120606_075. 
  3. Van Uytvange, Koen (11 சூலை 2012). "Vital Borkelmans wordt assistent-bondscoach" (in Dutch). Het Nieuwsblad. http://www.nieuwsblad.be/article/detail.aspx?articleid=DMF20120710_00218284. 
  4. "Kompany blijft kapitein - Vermaelen ontgoocheld" (in Dutch). Gazet Van Antwerpen. 10 நவம்பர் 2011. http://www.gva.be/sport/voetbal/voetbal-binnenland/aid1090903/kompany-blijft-kapitein-vermaelen-ontgoocheld.aspx. 
  5. 5.0 5.1 5.2 "Belgium – Record International Players". RSSSF. 15 அக்டோபர் 2013. 12 திசம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; FIFArank என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. "World Football Elo Ratings".
  8. 8.0 8.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Elo180813 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. "Belgium - List of International Matches". RSSSF. 2 செப்டம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.

அடிக்குறிப்புகள்தொகு

  1. Note that this match is not considered to be a full international by the Football Association, and does not appear in the records of the England national football team

வெளி இணைப்புகள்தொகு