ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி

(அர்கெந்தீனா தேசிய காற்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி (Argentina national football team, எசுப்பானியம்: Selección de fútbol de Argentina) பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆர்ஜெண்டினாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை அர்கெந்தீனா நாட்டில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அர்கெந்தீனா கால்பந்துச் சங்கம் (AFA) மேலாண்மை செய்கின்றது. இந்த அணியின் தாயக விளையாட்டரங்கமாக எசுடேடியோ அன்டோனியோ வெசுபுசியோ லிபர்டி விளங்குகின்றது. தலைமை பயிற்றுனராக அலெயான்ட்ரோ சபெல்லா உள்ளார். பிஃபா உலகத் தரவரிசையில் தற்போது மூன்றாமிடத்தில் அர்கெந்தீனா உள்ளது.[3]

ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி
Shirt badge/Association crest
அடைபெயர்La Albiceleste (வெள்ளையும் வான் நீலமும்)
கூட்டமைப்புAsociación del Fútbol Argentino (AFA)
கண்ட கூட்டமைப்புதென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர்அலெயான்ட்ரோ சபெல்லா
அணித் தலைவர்லியோனல் மெஸ்ஸி
Most capsயாவியர் சானெட்டி (145)
அதிகபட்ச கோல் அடித்தவர்காபிரியல் பத்திசுடுடா (56)
தன்னக விளையாட்டரங்கம்எல் மொனுமென்டல்
மாரியோ ஆல்பெர்ட்டோ கெம்பெசு
பீஃபா குறியீடுARG
பீஃபா தரவரிசை3
அதிகபட்ச பிஃபா தரவரிசை1 (மார்ச் 2007)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை24 (ஆகத்து 1996)
எலோ தரவரிசை4
அதிகபட்ச எலோ1 (மிக அண்மையில் சூலை 2007, மொத்தம் 34 முறை)
குறைந்தபட்ச எலோ28 (சூன் 1990)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 உருகுவை 2–3 அர்கெந்தீனா அர்கெந்தீனா
(மொன்ட்வீடியோ, உருகுவை; மே 16, 1901)[1][1]
பெரும் வெற்றி
அர்கெந்தீனா அர்கெந்தீனா 12–0 எக்குவடோர் 
(மொன்ட்வீடியோ, உருகுவை; சனவரி 22, 1942)
பெரும் தோல்வி
 செக்கோசிலோவாக்கியா 6–1 அர்கெந்தீனா அர்கெந்தீனா
(எல்சிங்போர்கு, சுவீடன்; சூன் 15, 1958)
 பொலிவியா 6–1 அர்கெந்தீனா அர்கெந்தீனா
(லா பாஸ், பொலீவியா; ஏப்ரல் 1, 2009)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்15 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1978 மற்றும் 1986
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்39 (முதற்தடவையாக 1916 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1921,1925,1927, 1929, 1937, 1941,1945,1946, 1947,1955, 1957, 1959, 1991, 1993
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1992 கிங் ஃபாட் கோப்பை
ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி 1964
ஆர்ஜெண்டினா தேசிய காற்பந்து அணி 2018

லா செலக்சியோன் (தேசிய அணி) என்றும் ஆல்பிசெலஸ்ட்டிசு (வான்நீலமும் வெள்ளையும்) என்றும் இரசிகர்களால் குறிப்பிடப்படும் இந்த அணி நான்கு உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் பங்கேற்றுள்ளது. முதன்முதலான 1930 உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் உருகுவையிடம் 4–2 என்ற கணக்கில் தோற்றது. அடுத்தமுறை இறுதியாட்டத்தில் 1978 உலகக்கோப்பையில், நெதர்லாந்தை 3–1 கணக்கில் வென்றது. டீகோ மரடோனா தலைமையில் மீண்டும் 1986 உலகக்கோப்பையில் 3–2 என்ற கணக்கில் மேற்கு செருமனியை வெற்றி கண்டது. மிக அண்மையில் 1990 உலகக்கோப்பையில், செருமனியிடம் 1–0 என்ற கணக்கில் தோற்றது; செருமனி ஒரு சர்ச்சைக்குள்ளான பெனால்டி மூலம் வெற்றிக் கோலை அடித்திருந்தது.

ஆர்ஜெண்டினா கோபா அமெரிக்கா போட்டிகளில் மிகவும் வெற்றிகரமாக விளங்குகின்றது; 14 முறைகள் வென்றதுடன் 1941, 1945, 1946ஆம் ஆண்டுகளில் நடந்த 'கூடுதல்' தென் அமெரிக்க போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியூயும் கிரின் கோப்பையையும் 1992இல் வென்றுள்ளது. ஒலிம்பிக்சு கால்பந்தாட்டதில் ஏதென்சு 2004இலும் பீஜிங் 2008இலும் வெற்றி நாட்டியுள்ளது.[4]

ஆர்ஜெண்டினா பிரான்சும் மட்டுமே பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ள மூன்று முதன்மையான ஆடவர் கால்பந்துப் போட்டிகளை, (உலகக்கோப்பை,கூட்டமைப்புகளின் கோப்பை, ஒலிம்பிக் கால்பந்து) வென்றுள்ள இரு நாடுகளாகும். இவை இரண்டுமே தங்கள் கண்டத்தின் போட்டிகளான முறையே (அர்கெந்தீனா கோபா அமெரிக்காவையும் பிரான்சு ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியையும்) வென்றுள்ளன.[5][6]

ஆர்ஜெண்டினாவிற்கும் பிரேசில்,உருகுவை,செருமனி மற்றும் இங்கிலாந்திற்கும் இடையே கால்பந்து வரலாற்று நிகழ்வுகள் காரணமான பகை நிலவுகின்றது.[7][8]

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் பான் அமெரிக்கா விளையாட்டுக்களில் கால்பந்தாட்டப் போட்டிகளில் அர்கெந்தீனா நடந்த 14 போட்டிகளில் ஆறில் வென்றுள்ளது: 1951, 1955,1959,1971,1995, 2003

மார்ச் 2007இல் அர்கெந்தீனா பிஃபா உலகத் தரவரிசையில் முதன்முதலாக முதலிடத்தை எட்டியது.[9]

மேற்சான்றுகள்

தொகு
  1. Pelayes, Héctor Darío (செப்டம்பர் 24, 2010). "ARGENTINA-URUGUAY Matches 1902–2009". RSSSF. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2010. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. After 1988, the tournament has been restricted to squads with no more than 3 players over the age of 23, and these matches are not regarded as part of the national team's record, nor are caps awarded.
  3. "– The FIFA/Coca-Cola World Ranking". FIFA. Archived from the original on 2013-12-12. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2012.
  4. "Football gold for Argentina". BBC News. ஆகத்து 28, 2004. http://news.bbc.co.uk/sport2/hi/olympics_2004/football/3607296.stm. பார்த்த நாள்: ஏப்ரல் 25, 2010. 
  5. "– Argentina on". FIFA. Archived from the original on 2012-06-14. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "– Tournaments". FIFA. Archived from the original on 2014-08-06. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. Wetzel, Dan (சூலை 1, 2010). "War of words renews Argentina-Germany rivalry – FBINTL – Yahoo! Sports". G.sports.yahoo.com. Archived from the original on 2010-07-09. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2012.
  8. "Great Footballing Rivalries : Argentina vs. Uruguay « SportsKeeda". Sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2012.
  9. "– Argentina first for first time". FIFA. Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் சூன் 7, 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)