எக்குவடோர் தேசிய காற்பந்து அணி
எக்குவடோரிய தேசிய கால்பந்து அணி (Ecuadorian national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் எக்குவடோர் நாட்டின் சார்பாகப் பங்குபெறும் அணியாகும். இதனை எக்குவடோரிய கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.
அடைபெயர் | La Tri (Tri-color) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Federación Ecuatoriana de Fútbol (FEF) | ||
கண்ட கூட்டமைப்பு | தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு | ||
தலைமைப் பயிற்சியாளர் | Reinaldo Rueda | ||
அணித் தலைவர் | Antonio Valencia | ||
Most caps | Iván Hurtado (167) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Agustín Delgado (31) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Estadio Olímpico Atahualpa, கித்தோ | ||
பீஃபா குறியீடு | ECU | ||
பீஃபா தரவரிசை | 23 ▼ 1 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 10 (ஏப்ரல் 2013) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 76 (சூன் 1995) | ||
எலோ தரவரிசை | 16 1 | ||
அதிகபட்ச எலோ | 11 (27 மார்ச் 2013) | ||
குறைந்தபட்ச எலோ | 111 (திசம்பர் 1959) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
பொலிவியா 1–1 Ecuador (Bogotá, கொலம்பியா; August 8, 1938) | |||
பெரும் வெற்றி | |||
Ecuador 6–0 பெரு (கித்தோ, எக்குவடோர்; June 22, 1975) | |||
பெரும் தோல்வி | |||
அர்கெந்தீனா 12–0 Ecuador (Montevideo, உருகுவை; January 22, 1942) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 3 (முதற்தடவையாக 2002 இல்) | ||
சிறந்த முடிவு | 16-அணிகள் சுற்ற (2006) | ||
கோபா அமெரிக்கா | |||
பங்கேற்புகள் | 24 (முதற்தடவையாக 1939 இல்) | ||
சிறந்த முடிவு | நான்காம் இடம் (1959, 1993) | ||
CONCACAF Gold Cup | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2002 இல்) | ||
சிறந்த முடிவு | குழு நிலை (2002) |
எக்குவடோர் மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது (2002, 2006 மற்றும் 2014). உலகக்கோப்பையில் இவ்வணியின் சிறந்த செயல்பாடு, 2006-இல் 16-அணிகள் சுற்றை எட்டியதாகும்; அச்சுற்றில் இங்கிலாந்திடம் தோற்று, போட்டியிலிருந்து வெளியேறியது. தென்னமெரிக்கக் காற்பந்துக் கூட்டமைப்பின் கோப்பையான கோபா அமெரிக்காவை வெல்லாத மூன்று தேசிய அணிகளில் இதுவும் ஒன்றாகும்; மற்றவை சிலி மற்றும் வெனிசுவேலா ஆகியவையாகும். அப்போட்டியில் இவ்வணியின் சிறந்த செயல்பாடு 1959 மற்றும் 1993-ஆம் ஆண்டுகளில் நான்காம் இடம் பெற்றது ஆகும்; அவ்விரண்டு முறையும் எக்குவடோர் நாட்டில்தான் கோபா அமெரிக்கா போட்டி நடத்தப்பட்டது.