பெரு தேசிய காற்பந்து அணி
பெரு தேசிய காற்பந்து அணி (Peru national football team), (Selección de fútbol de Perú) 1927ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டு காற்பந்துப் போட்டிகளில் பெருவின் சார்பாக விளையாடும் அணியாகும். இதனை பெருவிய காற்பந்துக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கின்றது. இது பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு கீழான தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பிலுள்ள பத்து அணிகளில் ஒன்றாகும். இந்த அணியின் செயற்றிறன் நிலையானதாக இல்லை; 1930களிலும் பின்னர் 1970களிலும் பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.[4] இதன் தன்னக அரங்கமாக தலைநகர் லிமாவிலுள்ள தேசிய விளையாட்டரங்கம் (Estadio Nacional) உள்ளது.
அடைபெயர் | லா பிளாங்கிரோயா (வெள்ளையும் சிவப்பும்) இலாசு இன்காசு ( இன்காக்காரர்கள்) | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூட்டமைப்பு | பெருவிய காற்பந்துக் கூட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||
கண்ட கூட்டமைப்பு | தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு (தென் அமெரிக்கா) | |||||||||||||||||||||||||||||||||||||
தலைமைப் பயிற்சியாளர் | ரிகார்தோ கரேசா[1] | |||||||||||||||||||||||||||||||||||||
துணைப் பயிற்சியாளர் | செர்ஜியோ சான்டன் | |||||||||||||||||||||||||||||||||||||
அணித் தலைவர் | கிளாடியோ பிசாரோ[2] | |||||||||||||||||||||||||||||||||||||
Most caps | Roberto Palacios (128)[3] | |||||||||||||||||||||||||||||||||||||
அதிகபட்ச கோல் அடித்தவர் | பவுலோ கெர்ரேரோ (27) | |||||||||||||||||||||||||||||||||||||
தன்னக விளையாட்டரங்கம் | தேசிய விளையாட்டரங்கம், லிமா (Estadio Nacional) | |||||||||||||||||||||||||||||||||||||
பீஃபா குறியீடு | PER | |||||||||||||||||||||||||||||||||||||
பீஃபா தரவரிசை | 46 (5 மே 2016) | |||||||||||||||||||||||||||||||||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 19 (சூலை 2013) | |||||||||||||||||||||||||||||||||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 91 (செப்டம்பர் 2009) | |||||||||||||||||||||||||||||||||||||
எலோ தரவரிசை | 19 (6 சூலை 2015) | |||||||||||||||||||||||||||||||||||||
அதிகபட்ச எலோ | 12 (சூன் 1978) | |||||||||||||||||||||||||||||||||||||
குறைந்தபட்ச எலோ | 75 (மே 1994) | |||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||||||||||||||||||||||||||||||||||||
பெரு 0–4 உருகுவை (லிமா, பெரு; 1 நவம்பர் 1927) | ||||||||||||||||||||||||||||||||||||||
பெரும் வெற்றி | ||||||||||||||||||||||||||||||||||||||
பெரு 9–1 எக்குவடோர் (பொகோட்டா; 11 ஆகத்து 1938) | ||||||||||||||||||||||||||||||||||||||
பெரும் தோல்வி | ||||||||||||||||||||||||||||||||||||||
பிரேசில் 7–0 பெரு (சான்ட்டா குரூசு டெ லா சியேறா; 26 சூன் 1997) | ||||||||||||||||||||||||||||||||||||||
உலகக் கோப்பை | ||||||||||||||||||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1930 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||
சிறந்த முடிவு | முதல் 8, 1970 (காலிறுதி) & 1978 (சுற்று 2) | |||||||||||||||||||||||||||||||||||||
கோபா அமெரிக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 29 (முதற்தடவையாக 1927 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1939 , 1975 | |||||||||||||||||||||||||||||||||||||
CONCACAF தங்கக்கோப்பை | ||||||||||||||||||||||||||||||||||||||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2000 இல்) | |||||||||||||||||||||||||||||||||||||
சிறந்த முடிவு | மூன்றாமிடம் (பகிர்வு), 2000 | |||||||||||||||||||||||||||||||||||||
Honours
|
பெரு தேசிய அணி இருமுறை கோபா அமெரிக்காவை வென்றுள்ளது; உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு நான்கு முறை தகுதி பெற்றுள்ளது. 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் காற்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது. காற்பந்துப் போட்டிகளில் சிலி மற்றும் எக்குவடோருடன் தொடர்ந்த பகை கொண்டுள்ளது.[5] பெருவின் தேசியக் கொடியின் வண்ணங்களை கலந்து இந்த அணிக்கு சிவப்புக் குறுக்குக்கோடுகளுடனான வெள்ளை சட்டைகள் சீருடையாக உள்ளன. இந்த வடிவமைப்பு 1936 முதல் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது.[6]
பெரு அணி கடைசியாக 1982இல் உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றது. அதன் பிறகு இதுவரை தகுதி பெறவில்லை. வேறெந்த பெரும் போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை. பெரு காற்பந்துக் கூட்டமைப்பில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்களை பெருநாட்டு அரசு விசாரித்த நிலையில் 2008இல் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க இந்நாட்டிற்கு பிபா இடைக்காலத்தடை விதித்தது. ரிகார்தோ கரேசா வழிகாட்டுதலில் பெரு 2015ஆம் ஆண்டு கோபா அமெரிக்காவில் மூன்றாமிடத்தை எட்டியது. கோபா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டியில் பங்கேற்று வருகின்றது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Ricardo Gareca: "Es el desafío más importante de mi carrera"". El Comercio (in Spanish). Empresa Editora El Comercio. 2 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "¿Por qué Claudio se retractó sobre lo que dijo de Bielsa?". El Comercio (in Spanish). Empresa Editora El Comercio. 29 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ José Luis Pierrend (29 பெப்ரவரி 2012). "Peru – Record International Players". Rec.Sport.Soccer Statistics Foundation (RSSSF). பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2013.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Witzig 2006, ப. 349.
- ↑ "A derby and a debut in South America". FIFA. 10 அக்டோபர் 2011 இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305152150/http://www.fifa.com/worldcup/news/y=2011/m=10/news=derby-and-debut-south-america-1524489.html. பார்த்த நாள்: 4 சூலை 2015.
- ↑ "La Blanquiroja" (in Spanish). ArkivPeru. Archived from the original on 24 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 June 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்
தொகு- Peru FA பரணிடப்பட்டது 2007-02-05 at the வந்தவழி இயந்திரம்
- FIFA team profile பரணிடப்பட்டது 2010-05-02 at the வந்தவழி இயந்திரம்
- ELO team records