கோப்பா அமெரிக்கா

(கோபா அமெரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முன்னதாக தென் அமெரிக்க போட்டிகள் என அறியப்பட்ட கோப்பா அமெரிக்கா (அமெரிக்காவின் கோப்பை எனப் பொருள்பட எசுப்பானியம் மற்றும் போர்த்துகீசியத்தில் Copa América ) தென் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டினைக் கட்டுப்படுத்தும் கான்மேபோல் (CONMEBOL) சங்க உறுப்பினர் நாடுகளின் தேசிய ஆண்கள் கால்பந்து அணியினரிடையே நடைபெறும் ஓர் பன்னாட்டு கால்பந்து போட்டியாகும்.

கோப்பா அமெரிக்கா
தோற்றம்1916 (தென் அமெரிக்கப் போட்டிகள்)
1975 (கோப்பா அமெரிக்கா)
மண்டலம்தென் அமெரிக்கா
அணிகளின் எண்ணிக்கை12
தற்போதைய வாகையாளர் பிரேசில் (9வது முறை)
அதிக முறை வென்ற அணி உருகுவை
(15 முறைகள்)
2021 கோப்பா அமெரிக்கா

தற்போதைய போட்டிகளின் வடிவத்தின்படி, போட்டியை விருந்தோம்பும் நாட்டின் பல ஊர்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக 12 அணிகள் போட்டியிடுகின்றன. கான்மேபோல் சங்கத்திற்கு பத்து உறுப்பினர்களே உள்ளதால் மீதமுள்ள இரு இடங்களுக்கு பிற ஃபீஃபா சங்கங்களிலிருந்து இரு நாடுகள் விளையாட அழைக்கப்படுகின்றன. மெக்சிகோ, கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அணிகள் வழமையாக அழைக்கப்படுகின்றன. இதுவரையான 42 போட்டிகளில் ஏழு நாடுகளின் அணிகள் இந்தக் கோப்பையை வென்றுள்ளன. அர்ச்சென்டினா மற்றும் உருகுவே அணிகள் ஒவ்வொன்றும் கோப்பா அமெரிக்காவை 14 முறைகள் வென்றுள்ளன. நடப்பு வாகையாளரான பிரேசில் அணி எட்டு முறையும் பராகுவே அணியும் பெரு நாட்டணியும் தலா இருமுறை வென்றுள்ளன. இவர்களைத் தவிர கொலம்பியா மற்றும் பொலிவியா நாட்டு அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.

உலகில் மிகப்பரவலாகப் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் கோப்பா அமெரிக்காவும் ஒன்றாகும்.

முடிவுகள்

தொகு

தென் அமெரிக்க போட்டிகள் காலத்தில்

தொகு
ஆண்டு நடத்திய நாடு போட்டிகளின் இறுதி முடிவுகள்
வாகையாளர் இரண்டாமிடம் மூன்றாமிடம் நான்காமிடம்
1916
[C]
  அர்கெந்தீனா   உருகுவை   அர்கெந்தீனா   பிரேசில்   சிலி
1917   உருகுவை   உருகுவை   அர்கெந்தீனா   பிரேசில்   சிலி
1919   பிரேசில்   பிரேசில்   உருகுவை   அர்கெந்தீனா   சிலி
1920   சிலி   உருகுவை   அர்கெந்தீனா   பிரேசில்   சிலி
1921   அர்கெந்தீனா   அர்கெந்தீனா   பிரேசில்   உருகுவை   பரகுவை
1922   பிரேசில்   பிரேசில்   பரகுவை   உருகுவை   அர்கெந்தீனா
1923   உருகுவை   உருகுவை   அர்கெந்தீனா   பரகுவை   பிரேசில்
1924   உருகுவை   உருகுவை   அர்கெந்தீனா   பரகுவை   சிலி
1925
[A]
  அர்கெந்தீனா   அர்கெந்தீனா   பிரேசில்   பரகுவை N/A
1926   சிலி   உருகுவை   அர்கெந்தீனா   சிலி   பரகுவை
1927   பெரு   அர்கெந்தீனா   உருகுவை   பெரு   பொலிவியா
1929   அர்கெந்தீனா   அர்கெந்தீனா   பரகுவை   உருகுவை   பெரு
1935
[D]
  பெரு   உருகுவை   அர்கெந்தீனா   பெரு   சிலி
1937   அர்கெந்தீனா   அர்கெந்தீனா   பிரேசில்   உருகுவை   பரகுவை
1939   பெரு   பெரு   உருகுவை   பரகுவை   சிலி
1941
[D]
  சிலி   அர்கெந்தீனா   உருகுவை   சிலி   பெரு
1942   உருகுவை   உருகுவை   அர்கெந்தீனா   பிரேசில்   பரகுவை
1945
[D]
  சிலி   அர்கெந்தீனா   பிரேசில்   சிலி   உருகுவை
1946
[D]
  அர்கெந்தீனா   அர்கெந்தீனா   பிரேசில்   பரகுவை   உருகுவை
1947   எக்குவடோர்   அர்கெந்தீனா   பரகுவை   உருகுவை   சிலி
1949   பிரேசில்   பிரேசில்   பரகுவை   பெரு   பொலிவியா
1953   பெரு   பரகுவை   பிரேசில்   உருகுவை   சிலி
1955   சிலி   அர்கெந்தீனா   சிலி   பெரு   உருகுவை
1956
[D]
  உருகுவை   உருகுவை   சிலி   அர்கெந்தீனா   பிரேசில்
1957   பெரு   அர்கெந்தீனா   பிரேசில்   உருகுவை   பெரு
1959   அர்கெந்தீனா   அர்கெந்தீனா   பிரேசில்   பரகுவை   பெரு
1959
[D]
  எக்குவடோர்   உருகுவை   அர்கெந்தீனா   பிரேசில்   எக்குவடோர்
1963   பொலிவியா   பொலிவியா   பரகுவை   அர்கெந்தீனா   பிரேசில்
1967   உருகுவை   உருகுவை   அர்கெந்தீனா   சிலி   பரகுவை

கோப்பா அமெரிக்கா காலத்தில்

தொகு
ஆண்டு நடத்திய நாடு இறுதி மூன்றாமிட ஆட்டம் / அரையிறுதி
வாகையாளர் புள்ளிகள் இரண்டாமிடம் மூன்றாமிடம் புள்ளிகள் நான்காமிடம்
1975 நிலையான நிகழிடமில்லை   பெரு 0 – 1 / 2 – 0
முடிவு ஆட்டம் 1 – 0
  கொலம்பியா   பிரேசில்
  உருகுவை
N/A[B]
1979 நிலையான நிகழிடமில்லை   பரகுவை 3 – 0 / 0 – 1
முடிவு-ஆட்டம்
0 – 0 கூடுதல் நேரம்
  சிலி   பிரேசில்
  பெரு
N/A[B]
1983 நிலையான நிகழிடமில்லை   உருகுவை 2 – 0 / 1 – 1   பிரேசில்   பரகுவை
  பெரு
N/A[B]
1987   அர்கெந்தீனா   உருகுவை 1 – 0   சிலி   கொலம்பியா 2 – 1   அர்கெந்தீனா
1989   பிரேசில்   பிரேசில் [E]   உருகுவை   அர்கெந்தீனா   பரகுவை
1991   சிலி   அர்கெந்தீனா [E]   பிரேசில்   சிலி   கொலம்பியா
1993   எக்குவடோர்   அர்கெந்தீனா 2 – 1   மெக்சிக்கோ   கொலம்பியா 1 – 0   எக்குவடோர்
1995   உருகுவை   உருகுவை 1 – 1
5–3 பெனால்டி
  பிரேசில்   கொலம்பியா 4 – 1   ஐக்கிய அமெரிக்கா
1997   பொலிவியா   பிரேசில் 3 – 1   பொலிவியா   மெக்சிக்கோ 1 – 0   பெரு
1999   பரகுவை   பிரேசில் 3 – 0   உருகுவை   மெக்சிக்கோ 2 – 1   சிலி
2001   கொலம்பியா   கொலம்பியா 1 – 0   மெக்சிக்கோ   ஒண்டுராசு 2 – 2
5–4 பெனால்டி
  உருகுவை
2004   பெரு   பிரேசில் 2 – 2
4–2 பெனால்டி
  அர்கெந்தீனா   உருகுவை 2 – 1   கொலம்பியா
2007   வெனிசுவேலா   பிரேசில் 3 – 0   அர்கெந்தீனா   மெக்சிக்கோ 3 – 1   உருகுவை
2011   அர்கெந்தீனா   உருகுவை 3 – 0   பரகுவை   பெரு 4 – 1   வெனிசுவேலா
2015   சிலி  
சிலி
0 – 0
4–1 பெனால்டி
 
அர்கெந்தீனா
 
பெரு
2 – 0  
பரகுவை
2019   பிரேசில்
  • குறிப்புகள்:
    • அழைக்கப்பட்ட அணிகள் சாய்வெழுத்துகளில்
    • பெனால்டி – பெனால்டி தீர்வு முறையில்

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Copa América
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பா_அமெரிக்கா&oldid=3008363" இலிருந்து மீள்விக்கப்பட்டது