2011 கோப்பா அமெரிக்கா

2011 கோப்பா அமெரிக்கா 2011 (2011 Copa América), காம்பனேடோ சூதாமெரிக்கானோ கோப்பா அமெரிக்கா (Campeonato Sudamericano Copa América) அல்லது கோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011 என்றெல்லாம் அறியப்படும் பன்னாட்டு கால்பந்துப் போட்டிகள் தென் அமெரிக்க கால்பந்து அணிகளிடையே நடைபெறும் கோப்பா அமெரிக்காவின் 43வது பதிப்பாகும். கான்மேபோல் என்ற அமைப்பால் நடத்தப்படும் இந்தப்போட்டிகள் சூலை 1, 2011 முதல் சூலை 24, 2011 வரை அர்ச்சென்டினாவில் நடைபெற்றன.

2011 கோப்பா அமெரிக்கா
கோப்பா அமெரிக்கா அர்ச்சென்டினா 2011
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுArgentina
நாட்கள்July 1 – July 24
அணிகள்12 (2 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)8 (8 நகரங்களில்)
மூன்றாம் இடம் பெரு
நான்காம் இடம் வெனிசுவேலா
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்26
எடுக்கப்பட்ட கோல்கள்54 (2.08 /ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)பெரு போலோ குவர்ரேரோ
(5 கோல்கள்)
உருகுவை லூயி அல்பெர்ட்டோ சுயாரெசு
(4 கோல்கள்)
சிறந்த ஆட்டக்காரர்உருகுவை லூயி அல்பெர்ட்டோ சுயாரெசு
2007
2015

2011ஆம் ஆண்டுப்போட்டிகளின் இறுதியாட்டத்தில் உருகுவே 3-0 என்ற கோல்கணக்கில் பராகுவே அணியை வென்று பதினைந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாமிடம் பெற்ற பராகுவே போலிவியா கோப்பையை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் பெரு வெனிசூலாவை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து மூன்றாமிடத்தைப் பிடித்தது.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Copa América 2011
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2011_கோப்பா_அமெரிக்கா&oldid=3522905" இலிருந்து மீள்விக்கப்பட்டது