கோப்பா அமெரிக்கா
முன்னதாக தென் அமெரிக்க போட்டிகள் என அறியப்பட்ட கோப்பா அமெரிக்கா (அமெரிக்காவின் கோப்பை எனப் பொருள்பட எசுப்பானியம் மற்றும் போர்த்துகீசியத்தில் Copa América ) தென் அமெரிக்காவில் கால்பந்து விளையாட்டினைக் கட்டுப்படுத்தும் கான்மேபோல் (CONMEBOL) சங்க உறுப்பினர் நாடுகளின் தேசிய ஆண்கள் கால்பந்து அணியினரிடையே நடைபெறும் ஓர் பன்னாட்டு கால்பந்து போட்டியாகும்.
தோற்றம் | 1916 (தென் அமெரிக்கப் போட்டிகள்) 1975 (கோப்பா அமெரிக்கா) |
---|---|
மண்டலம் | தென் அமெரிக்கா |
அணிகளின் எண்ணிக்கை | 12 |
தற்போதைய வாகையாளர் | பிரேசில் (9வது முறை) |
அதிக முறை வென்ற அணி | உருகுவை (15 முறைகள்) |
2021 கோப்பா அமெரிக்கா |
தற்போதைய போட்டிகளின் வடிவத்தின்படி, போட்டியை விருந்தோம்பும் நாட்டின் பல ஊர்களில் ஒரு மாதத்திற்கும் மேலாக 12 அணிகள் போட்டியிடுகின்றன. கான்மேபோல் சங்கத்திற்கு பத்து உறுப்பினர்களே உள்ளதால் மீதமுள்ள இரு இடங்களுக்கு பிற ஃபீஃபா சங்கங்களிலிருந்து இரு நாடுகள் விளையாட அழைக்கப்படுகின்றன. மெக்சிகோ, கோஸ்ட்டா ரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் அணிகள் வழமையாக அழைக்கப்படுகின்றன. இதுவரையான 42 போட்டிகளில் ஏழு நாடுகளின் அணிகள் இந்தக் கோப்பையை வென்றுள்ளன. அர்ச்சென்டினா மற்றும் உருகுவே அணிகள் ஒவ்வொன்றும் கோப்பா அமெரிக்காவை 14 முறைகள் வென்றுள்ளன. நடப்பு வாகையாளரான பிரேசில் அணி எட்டு முறையும் பராகுவே அணியும் பெரு நாட்டணியும் தலா இருமுறை வென்றுள்ளன. இவர்களைத் தவிர கொலம்பியா மற்றும் பொலிவியா நாட்டு அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.
உலகில் மிகப்பரவலாகப் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் கோப்பா அமெரிக்காவும் ஒன்றாகும்.
முடிவுகள்
தொகுதென் அமெரிக்க போட்டிகள் காலத்தில்
தொகுகோப்பா அமெரிக்கா காலத்தில்
தொகு- குறிப்புகள்:
- அழைக்கப்பட்ட அணிகள் சாய்வெழுத்துகளில்
- பெனால்டி – பெனால்டி தீர்வு முறையில்
வெளியிணைப்புகள்
தொகு- The Copa América Archive – Trivia
- RSSSF archive – includes extensive match reports.