பரகுவை தேசிய காற்பந்து அணி
பராகுவே தேசிய காற்பந்து அணி (Paraguay national football team) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டங்களில் பராகுவேயின் சார்பாக விளையாடும் அணியாகும். இதனை பரகுவை காற்பந்துச் சங்கம் (Asociación Paraguaya de Fútbol) நிர்வகிக்கின்றது. பராகுவே தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பின் பத்து உறுப்பினர்களில் ஒன்றாகும். ஆல்பிரோயா எனச் செல்லப்பெயரிடப்பட்டுள்ள இந்த அணி உலகக்கோப்பை காற்பந்து இறுதியாட்டங்களுக்கு எட்டு முறை தகுதி பெற்றுள்ளது (1930, 1950, 1958, 1986, 1998, 2002, 2006 and 2010); இரண்டாம் சுற்றுக்கு நான்கு முறை முன்னேஇயுள்ளது. வழமையாகப் பங்கேற்கும் கோபா அமெரிக்காவில் இருமுறை வாகை சூடியுள்ளது (1953, 1979). பிஃபா உலகத் தரவரிசையில் மிக உயர்ந்த இடமாக எட்டாமிடத்திலும் (மார்ச் 2001) மிகத் தாழ்ந்த இடமாக 103வதாகவும் (மே 1995) இருந்துள்ளது.
அடைபெயர் | லாசு குரானியசு லா அல்பிரோயா (வெள்ளையும் சிவப்பும்) | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூட்டமைப்பு | பராகுவை காற்பந்துச் சங்கம் (அசோசியேசன் பராகுவா டெ புட்பால்) (APF) | ||||||||||
கண்ட கூட்டமைப்பு | தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு | ||||||||||
தலைமைப் பயிற்சியாளர் | ரமன் டியாசு | ||||||||||
அணித் தலைவர் | ஜஸ்டோ வில்லார் | ||||||||||
Most caps | பவுலோ டி சில்வா (135) | ||||||||||
அதிகபட்ச கோல் அடித்தவர் | ரோக்கே சான்ட்டா குரூசு (32) | ||||||||||
தன்னக விளையாட்டரங்கம் | எசுடேடியோ டிபென்சோரெசு டெல் சாக்கோ | ||||||||||
பீஃபா குறியீடு | PAR | ||||||||||
பீஃபா தரவரிசை | 39 (5 மே 2016) | ||||||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 8 (மார்ச் 2001) | ||||||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 103 (மே 1995) | ||||||||||
எலோ தரவரிசை | 32 (28 மே 2016) | ||||||||||
அதிகபட்ச எலோ | 4 [1] (21 பெப்ரவரி 1954) | ||||||||||
குறைந்தபட்ச எலோ | 43 [1] (12 ஆகத்து 1962, 5 மார்ச் 2014, 31 மார்ச் 2015) | ||||||||||
| |||||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||||||||||
Paraguay 1–5 அர்கெந்தீனா (அசுன்சியோன், பரகுவை; 11 மே 1919) | |||||||||||
பெரும் வெற்றி | |||||||||||
Paraguay 7–0 பொலிவியா (இரியோ டி செனீரோ, பிரேசில்; 30 ஏப்ரல் 1949) ஆங்காங் 0–7 பரகுவை (ஆங்காங்; 17 நவம்பர் 2010) | |||||||||||
பெரும் தோல்வி | |||||||||||
அர்கெந்தீனா 8–0 பரகுவை (சான் டியேகோ, சிலி; 20 அக்டோபர் 1926) | |||||||||||
உலகக் கோப்பை | |||||||||||
பங்கேற்புகள் | 8 (முதற்தடவையாக 1930 இல்) | ||||||||||
சிறந்த முடிவு | காலிறுதி, 2010 | ||||||||||
கோபா அமெரிக்கா | |||||||||||
பங்கேற்புகள் | 34 (முதற்தடவையாக 1921 இல்) | ||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர், 1953, 1979 | ||||||||||
Honours
|
இந்த தேசிய அணி அரெகெந்தீனப் பயிற்றுநர் கெரார்டோ மார்ட்டினோ வழிகாட்டுதலில் மிகுந்த வெற்றிகளை ஈட்டியுள்ளது; இதற்காக 2007இல் அவருக்கு சிறந்த தென்னமெரிக்க பயிற்றுநர் விருது கிடைத்தது. இவரது பயிற்சியில் பராகுவே தனது கால்பந்து வரலாற்றிலேயே முதல்முறையாக 2010ஆம் ஆண்டில் உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது. தவிரவும் 2011 கோபா அமெரிக்காவில் இறுதியாட்டத்தில் பங்கேற்றது; இதில் தோல்வியுற்று இரண்டாமிடம் பெற்றது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Paraguay matches, ratings and points exchanged". Eloratings.net. பார்க்கப்பட்ட நாள் 2015-06-14.
- ↑ After 1988, the tournament has been restricted to squads with no more than 3 players over the age of 23, and these matches are not regarded as part of the national team's record, nor are caps awarded.
வெளி இணைப்புகள்
தொகு- Official site of the Paraguayan Football Association
- RSSSF archive of results 1919–2004
- Planet World Cup archive of results in the World Cup
- Planet World Cup archive of squads in the World Cup
- Planet World Cup archive of results in the World Cup qualifiers
- Paraguayan Football Site பரணிடப்பட்டது 2018-08-18 at the வந்தவழி இயந்திரம்