2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது கோடைகால ஒலிம்பிக் ஆகும். இது கிரேக்க தலைநகரான ஏதென்சில் ஆகத்து 13 முதல் 29 வரை நடைபெற்றது. இது அதிகாரபூர்வமாக XXVIII ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இதில் 201 நாடுகள் பங்கு பெற்றன. 10,625 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்[2], இதில் ஆண்கள் 6,296 பெண்கள் 4,329 ஆவர். இதில் 28 போட்டிகள் நடைபெற்றது அதில் 301 நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தமும் வாள் வீச்சும் இதில் இடம் பெற்றன. இப்போட்டிகளுக்கு 10 மில்லியன் யூரோ செலவானதாக சூன் 2004 ல் பிபிசி தெரிவித்தது. நவம்பர் 2004 கிரேக்க தூதரகம் இப்போட்டிக்கு 8.954 மில்லியன் யூரோ செலவானதாக கூறியது. இதில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட 1.08 மில்லியன் யூரோ அடக்கம்.

போட்டி நடத்தும் நாடு தெரிவு

தொகு
 
முகடி ஏதென்சு அருங்காட்சியகத்திலுள்ள இந்த களிமன் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது
2004 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு சுற்று 1 Run-off சுற்று 2 சுற்று 3 சுற்று 4
ஏதென்சு   கிரேக்க நாடு 32 38 52 66
ரோம்   இத்தாலி 23 28 35 41
கேப் டவுன்   தென்னாப்பிரிக்கா 16 62 22 20
இசுட்டாக்கோம்   சுவீடன் 20 19
புவெனசு ஐரிசு   அர்கெந்தீனா 16 44

பதக்கப் பட்டியல்

தொகு

பங்குகொண்டவைகளில் 74 நாடுகள் பதக்கம் பெற்றன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   ஐக்கிய அமெரிக்கா 36 39 26 101
2   சீனா 32 17 14 63
3   உருசியா 28 26 36 90
4   ஆத்திரேலியா 17 16 17 50
5   சப்பான் 16 9 12 37
6   செருமனி 13 16 20 49
7   பிரான்சு 11 9 13 33
8   இத்தாலி 10 11 11 32
9   தென் கொரியா 9 12 9 30
10   ஐக்கிய இராச்சியம் 9 9 12 30
11   கியூபா 9 7 11 27
12   அங்கேரி 8 6 3 17
13   உக்ரைன் 8 5 9 22
14   உருமேனியா 8 5 6 19
15   கிரேக்க நாடு* 6 6 4 16
16   பிரேசில் 5 2 3 10
17   நோர்வே 5 0 1 6
18   நெதர்லாந்து 4 9 9 22
19   சுவீடன் 4 2 1 7
20   எசுப்பானியா 3 11 6 20
21   கனடா 3 6 3 12
22   துருக்கி 3 3 5 11
23   போலந்து 3 2 5 10
24   நியூசிலாந்து 3 2 0 5
25   தாய்லாந்து 3 1 4 8
26   பெலருஸ் 2 5 6 13
27   ஆஸ்திரியா 2 4 1 7
28   எதியோப்பியா 2 3 2 7
29   ஈரான் 2 2 2 6
29   சிலவாக்கியா 2 2 2 6
31   சீன தைப்பே 2 2 1 5
32   சியார்சியா 2 2 0 4
33   பல்கேரியா 2 1 9 12
34   டென்மார்க் 2 1 5 8
35   ஜமேக்கா 2 1 2 5
36   உஸ்பெகிஸ்தான் 2 1 2 5
37   மொரோக்கோ 2 1 0 3
38   அர்கெந்தீனா 2 0 4 6
39   சிலி 2 0 1 3
40   கசக்கஸ்தான் 1 4 3 8
41   கென்யா 1 4 2 7
42   செக் குடியரசு 1 3 5 9
43   தென்னாப்பிரிக்கா 1 3 2 6
44   குரோவாசியா 1 2 2 5
45   லித்துவேனியா 1 2 0 3
46   எகிப்து 1 1 3 5
46   சுவிட்சர்லாந்து 1 1 3 5
48   இந்தோனேசியா 1 1 2 4
49   சிம்பாப்வே 1 1 1 3
50   அசர்பைஜான் 1 0 4 5
51   பெல்ஜியம் 1 0 2 3
52   பஹமாஸ் 1 0 1 2
52   இசுரேல் 1 0 1 2
54   கமரூன் 1 0 0 1
54   டொமினிக்கன் குடியரசு 1 0 0 1
54   ஐக்கிய அரபு அமீரகம் 1 0 0 1
57   வட கொரியா 0 4 1 5
58   லாத்வியா 0 4 0 4
59   மெக்சிக்கோ 0 3 1 4
60   போர்த்துகல் 0 2 1 3
61   பின்லாந்து 0 2 0 2
61   செர்பியாவும் மொண்டெனேகுரோவும் 0 2 0 2
63   சுலோவீனியா 0 1 3 4
64   எசுத்தோனியா 0 1 2 3
65   ஆங்காங் 0 1 0 1
65   இந்தியா 0 1 0 1
65   பரகுவை 0 1 0 1
68   கொலம்பியா 0 0 2 2
68   நைஜீரியா 0 0 2 2
68   வெனிசுவேலா 0 0 2 2
71   எரித்திரியா 0 0 1 1
71   மங்கோலியா 0 0 1 1
71   சிரியா 0 0 1 1
71   டிரினிடாட் மற்றும் டொபாகோ 0 0 1 1
மொத்தம் 301 300 326 927

மேற்சான்றுகள்

தொகு
  1. "Cost of Athens 2004 Olympics". Embassy of Greek. greekembassy.org. Archived from the original on 19 டிசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 13 November 2004. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "Athens 2004". International Olympic Committee. olympic.org. பார்க்கப்பட்ட நாள் 19 January 2008.
  3. "The Olympic Summer Games Factsheet" (PDF). International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 5 August 2012.