2002 உலகக்கோப்பை காற்பந்து
2002 உலகக்கோப்பை காற்பந்து நான்காண்டுகளுக்கு ஒருமுறையான காற்பந்து உலகக்கோப்பையின் 17வது நிகழ்வாகும். இதனை தென்கொரியாவும் சப்பானும் இணைந்து மே 31 முதல் சூன் 30 வரை நடத்தின. ஆசியாவில் நிகழ்த்தப்பட்ட முதல் காற்பந்து உலகக்கோப்பைப் போட்டியாக இது அமைந்தது. மேலும் இந்தப் போட்டிகள் தான் தங்க கோல் எனப்படும் சமன்முறிப்பு விதியின் கடைசி நிகழ்வாகும். இறுதியாட்டத்தில் பிரேசில் செருமனியை 2–0 என்ற கணக்கில் வென்று கோப்பையை ஐந்தாம் முறையாக கைப்பற்றினர்.[1] துருக்கி தென் கொரியாவை 3–2 என்ற கணக்கில் வென்று மூன்றாமிடத்தை வென்றது.[2] முந்தைய உலகக்கோப்பையின் வெற்றியாளர்களாக கோப்பையை வைத்திருந்த பிரான்சு குழுநிலைகளிலேயே வெளியேறியது.
2002 FIFA 월드컵 한국/일본 2002 FIFAワールドカップ 韓国/日本 | |
---|---|
சுற்றுப்போட்டி விவரங்கள் | |
இடம்பெறும் நாடுகள் | South Korea Japan |
நாட்கள் | 31 மே – 30 சூன் (31 நாட்கள்) |
அணிகள் | 32 (5 கூட்டமைப்புகளில் இருந்து) |
அரங்கு(கள்) | 20 (20 நகரங்களில்) |
இறுதி நிலைகள் | |
வாகையாளர் | பிரேசில் (5-ஆம் தடவை) |
இரண்டாம் இடம் | செருமனி |
மூன்றாம் இடம் | துருக்கி |
நான்காம் இடம் | தென் கொரியா |
போட்டித் தரவுகள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 64 |
எடுக்கப்பட்ட கோல்கள் | 161 (2.52 /ஆட்டம்) |
பார்வையாளர்கள் | 27,05,197 (42,269/ஆட்டம்) |
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்) | ரொனால்டோ (8 இலக்குகள்) |
சிறந்த ஆட்டக்காரர் | ஓலிவர் கான் |
← 1998 2006 → | |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Brazil crowned world champions". BBC Sport. 30 சூன் 2002 இம் மூலத்தில் இருந்து 2012-03-27 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/66UD7w04x?url=http://news.bbc.co.uk/sport3/worldcup2002/hi/matches_wallchart/germany_v_brazil/newsid_2067000/2067939.stm. பார்த்த நாள்: 27 மார்ச் 2012.
- ↑ "Turkey finish in style". BBC Sport. 29 சூன் 2002 இம் மூலத்தில் இருந்து 2012-03-27 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/66UDVBe4p?url=http://news.bbc.co.uk/sport3/worldcup2002/hi/matches_wallchart/south_korea_v_turkey/newsid_2067000/2067940.stm. பார்த்த நாள்: 27 மார்ச் 2012.