கமரூன் தேசிய காற்பந்து அணி
கமரூன் தேசிய கால்பந்து அணி (Cameroon national football team), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கமரூன் நாட்டின் சார்பில் விளையாடும் கால்பந்து அணியாகும். இவர்களின் அடைபெயர்: வெல்லமுடியாத சிங்கங்கள் (பிரெஞ்சு: Les Lions Indomptables). இந்த அணியினை, கமரூன் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாடுகளையும் விட அதிகமுறை (7 தடவைகள் - 1982, 1990, 1994, 1998, 2002, 2010 மற்றும் 2014) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றிருக்கின்றனர். ஆயினும், ஒருதடவை மட்டுமே குழுநிலைக்கு அடுத்தநிலைக்கு முன்னேறியுள்ளனர். இவர்களே, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் காலிறுதிச் சுற்றை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணியினர்; 1990-ஆம் ஆண்டின் காலிறுதியில் இங்கிலாந்திடம் கூடுதல் ஆட்ட நேரத்தில் தோற்றனர். கமரூன் அணியினர் நான்கு முறை ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பையை வென்றிருக்கின்றனர்.
அடைபெயர் | Les Lions Indomptables (The Indomitable Lions) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | Fédération Camerounaise de Football | ||
மண்டல கூட்டமைப்பு | UNIFFAC (மத்திய ஆப்பிரிக்கா) | ||
கண்ட கூட்டமைப்பு | CAF (ஆப்பிரிக்கா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | Volker Finke | ||
அணித் தலைவர் | Samuel Eto'o | ||
Most caps | Rigobert Song (137) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Samuel Eto'o (55) | ||
தன்னக விளையாட்டரங்கம் | Stade Ahmadou Ahidjo | ||
பீஃபா குறியீடு | CMR | ||
பீஃபா தரவரிசை | 59 2 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 11 (நவம்பர் 2006) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 79 (பிப்ரவரி 2013) | ||
எலோ தரவரிசை | 56 | ||
அதிகபட்ச எலோ | 12 (சூன் 2003) | ||
குறைந்தபட்ச எலோ | 76 (ஏப்ரல் 1995) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Belgian Congo 3–2 French Cameroon (Belgian Congo; September 1956) | |||
பெரும் வெற்றி | |||
Cameroon 9–0 சாட் (DR Congo; April 1965) | |||
பெரும் தோல்வி | |||
நோர்வே 6-1 Cameroon (ஒசுலோ, Norway; 31 October 1990) உருசியா 6–1 Cameroon (Palo Alto, California, USA; 28 June 1994) கோஸ்ட்டா ரிக்கா 5–0 Cameroon (San José, Costa Rica; 9 March 1997) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 7 (முதற்தடவையாக 1982 இல்) | ||
சிறந்த முடிவு | காலிறுதி; 1990 | ||
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை | |||
பங்கேற்புகள் | 16 (முதற்தடவையாக 1970 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1984, 1988, 2000, 2002 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2001 இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாம் இடம், 2003 |