சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி
சவூதி அரேபியா தேசிய காற்பந்து அணி (Saudi Arabia national football team, அரபு மொழி: منتخب السعودية لكرة القدم) பன்னாட்டு காற்பந்தாட்டங்களில் சவூதி அரேபியாவை சார்புப்படுத்துகின்றது. இந்த அணி அல்-சுக்கோர் (வல்லூறுகள்) எனவும் அல்-கோதோர் (பச்சைகள்) எனவும் இரசிகர்களால் அழைக்கப்படுகின்றது. ஆசியாவின் மிகவும் வெற்றிகரமான தேசிய அணியாகக் கருதப்படும் சவூதி அரேபியா ஆசியக் கோப்பையை மூன்று முறை (1984, 1988, 1996) வென்றுள்ளது; 1994இல் விளையாடத் தொடங்கிய பிறகு, உலகக்கோப்பை இறுதியாட்டங்களுக்கு அடுத்தடுத்து நான்கு முறை தகுதி பெற்றுள்ளது.
அடைபெயர் | الصقور الخضر (பச்சை வல்லூறுகள்) | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | சவூதி அரேபியக் காற்பந்துக் கூட்டமைப்பு | ||
மண்டல கூட்டமைப்பு | மேற்காசிய காற்பந்துக் கூட்டமைப்பு | ||
கண்ட கூட்டமைப்பு | ஆ.கா.கூ (ஆசியா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | பெர்ட் வான் மார்விக் | ||
அணித் தலைவர் | ஒசாமா ஹாசாவி | ||
Most caps | மொகமது அல்-தீயா (178)[1] | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | மஜெத் அப்துல்லா (71) | ||
பீஃபா குறியீடு | KSA | ||
பீஃபா தரவரிசை | 65 ▼ 5 (2 சூன் 2016) | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 21 (சூலை 2004) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 126 (திசம்பர் 2012) | ||
எலோ தரவரிசை | 74 (சூன் 2016) | ||
அதிகபட்ச எலோ | 27 (நவம்பர் 1998) | ||
குறைந்தபட்ச எலோ | 112 (1970, 1972) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
Saudi Arabia 1–1 லெபனான் (பெய்ரூத், லெபனான்; 18 சனவரி 1957) | |||
பெரும் வெற்றி | |||
கிழக்குத் திமோர் 0–10 சவூதி அரேபியா (டிலி, கிழக்குத் திமோர்; 17 நவம்பர் 2015) | |||
பெரும் தோல்வி | |||
வார்ப்புரு:நாட்டுத் தகவல் United Arab Republic 13–0 சவூதி அரேபியா (காசாபிளாங்கா, மொரோக்கோ; 3 செப்டம்பர் 1961) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1994 இல்) | ||
சிறந்த முடிவு | 16களின் சுற்று; 1994 | ||
ஆசியக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 9 (முதற்தடவையாக 1984 இல்) | ||
சிறந்த முடிவு | வெற்றியாளர்: 1984, 1988, 1996 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1992 இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாமிடம்: 1992 |
1994ஆம் ஆண்டு தான் பங்கேற்ற முதல் உலகக்கோப்பையில் குழுநிலை ஆட்டங்களில் தரவரிசையில் முன்நின்ற பெல்ஜியம், மொரோக்கோ அணிகளை அதிர்ச்சித் தோல்வியடைய வைத்தது; பதினாறு அணிகளின் சுற்றுக்கு முன்னேறி அங்கு சுவீடனிடம் வீழ்ந்தது. அடுத்த மூன்று உலகக்கோப்பைகளில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.