உருகுவை கால்பந்துச் சங்கம்

உருகுவை கால்பந்துச் சங்கம் (Uruguayan Football Association; எசுப்பானியம்: Asociación Uruguaya de FútbolAUF) என்பது தென் அமெரிக்காவின் உருகுவே நாட்டில் கால்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பாகும். 1900-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பு 1923-ஆம் ஆண்டில் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்தது. தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பைத் தோற்றுவித்த உறுப்பு சங்கங்களில் இதுவும் ஒன்றாகும். உருகுவை தேசிய காற்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பது இதன் பொறுப்பாகும். மேலும், உருகுவேயின் தேசிய கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் போட்டித்தொடர்களை ஏற்பாடு செய்து நடத்துவதும் இதன் பணியாகும்.

உருகுவை கால்பந்துச் சங்கம்
தென்னமெரிக்க
கால்பந்துக்
கூட்டமைப்பு
(CONMEBOL)
Association crest
தோற்றம்1900
ஃபிஃபா இணைவு1923
தென்னமெரிக்க
கால்பந்துக்
கூட்டமைப்பு
(CONMEBOL) இணைவு
1916
தலைவர்செபாஸ்டியன் பௌசா (Sebastián Bauzá)

வெளியிணைப்புகள்

தொகு