ஸ்டூவர்ட் பிரோட்

ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜான் பிரோட்: (Stuart Christopher John Broad , பிறப்பு: ஜூன் 24, 1986) என்பவர் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவராவார். வலது-கை மித வேகப் பந்துவீச்சாளரான இவர் இடது-கை மட்டையாளர் ஆவார். இவர் லீசெஸ்டெர்ஷயர் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். பின் நாட்டிங்ஹாம்ஷயர் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். இதே அணிக்காக இவரது தந்தையும் விளையாடினார். ஆகஸ்டு 2006 இல் துடுப்பாட்ட சங்கத்தின் சிறந்த இளவயது வீரருக்கான விருதினைப் பெற்றார்.

ஸ்டூவர்ட் பிரோட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜோன் பிரோட்
பிறப்பு24 சூன் 1986 (1986-06-24) (அகவை 37)
நொட்டிங்காம், இங்கிலாந்து
பட்டப்பெயர்பிரோடி[1]
உயரம்6 அடி 5 அங்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு-மிதம்
பங்குபந்து வீச்சுசாளர்
உறவினர்கள்கிறிஸ் பிரோட் (தந்தை)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 638)திசம்பர் 9 2007 எ. இலங்கை
கடைசித் தேர்வுதிசம்பர் 7 2010 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 197)ஆகத்து 30 2006 எ. பாக்கிஸ்தான்
கடைசி ஒநாபசெப்டம்பர் 22 2010 எ. பாக்கிஸ்தான்
ஒநாப சட்டை எண்8
மூலம்: ESPNcricinfo, 3 டிசம்பர் 2019

2009 ஆம் ஆண்டில் ஓவல் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். அந்தப் போட்டியில் 37 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 5 மட்டையாளர்களை வீழ்த்தினார். சூலை 30,2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மும்முறை வீழ்த்தினார்.இந்தப்போட்டியில் 46 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 6 மட்டையாளர்களை வீழ்த்தினார். 6/46 எனும் இந்த பந்துவீச்சு தான் இவரின் தற்போது வரையிலான சிறந்த பந்துவீச்சு ஆகும்.[2] ஆகஸ்ட் 2010 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 169 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 9ஆவது வீரராகத் களமிறங்கி அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். 2012 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 72 ஓட்டங்கள் கொடுத்து 7 மட்டையாளர்களை வீழ்த்தினார். இங்கிலாந்து அணிக்காக அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு அடுத்து பிரோட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பன்னாட்டுப் போட்டிகள் தொகு

2006 தொகு

ஆகஸ்டு 2006 இல் துடுப்பாட்ட சங்கத்தின் சிறந்த இளவயது வீரருக்கான விருதினைப் பெற்ற அடுத்த இரண்டாவது நாளில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார்.[3] தொடர்ந்து பாக்கித்தான் அணிக்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். இந்தப் போட்டியில் நான்கு நிறைவுகள் வீசி 35 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து சோயிப் மாலிக் மற்றும் யூனுஸ் கான் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். மூன்றாவது வீழ்த்தலுக்காக சாகித் அஃபிரிடி அடித்த பந்தை கெவின் பீட்டர்சன் தவறவிட்டதனால் மும்முறை வாய்ப்பு தவறியது.[4] ஆகஸ்டு 30இல் தனது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். தான் வீசிய முதல் நிறைவிலேயே மட்டையாளரை வீழ்த்தினார்.

2007 தொகு

2006ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி வாகையாளர் கோப்பைக்கான அணியில் இவர் இடம்பெறவில்லை. ஆனால் ஜான் லீவிஸ் மற்றும் கிறிஸ் ட்ரெம்லெட் ஆகியோருக்கு காயம் ஏற்படவே இவர் அணிக்கு அழைக்கப்பட்டார்.[5] மேலும் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இதன் இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றிக்கான இறுதி ஓட்டத்தை இவர் எடுத்தார்.[6]

செப்டம்பர் 19, 2007 இல் டர்பனில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவரின் ஒரு நிறைவில் ஆறு ஆறுகள் அடித்து இந்திய வீரர் யுவராஜ் சிங் சாதனை படைத்தார். பன்னாட்டு இருபது20 போட்டியில் முதல்முறையாகவும் பன்னாட்டுப் போட்டிகளில் நான்காவது முறையாகவும் இந்தச் சாதனை நிகழ்ந்தது.[7]

2008 தொகு

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் தோற்றிருந்தாலும் ஸ்டூவர்ட் பிரோட் 8 வீழ்த்தல்களுடன் முன்னணி பந்துவீச்சாளராக இருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் நடந்த தேர்வுத் தொடரின் கடைசிப் போட்டியில் பிரோட் தனது முதல் தேர்வு அரைநூறை எடுத்தார்.

26 ஆகத்து 2008இல் தென்னாப்பிரிக்காவுகக்கு எதிராக இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் 23 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 மட்டையாளர்களை வீழ்த்தினார். இதன்மூலம் பன்னாட்டுப் போட்டிகளில் தனது முதல் ஐந்து வீழ்த்தல் சாதனையைப் பதிவு செய்தார்.

2010 தொகு

2010 ஐசிசி உலக இருபது20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரோட் ஆட்ட நாயகன் விருது வென்றார். இறுதிப்போட்டியில் ஆத்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. அத்தொடரில் பிரோட் மொத்தம் 8 மட்டையாளர்களை வீழ்த்தியிருந்தார்.

பாக்கித்தானுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்வுத் தொடரில் தனது அணி 102-7 என்ற நிலையில் இருந்தபோது களமிறங்கிய பிரோட், 169 ஓட்டங்களை எடுத்தார். அவருடன் களத்தில் இருந்த ஜொனாதன் ட்ரோட்டும் நூறு எடுத்தார். இவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து 332 ஓட்டங்கள் எடுத்து 8வது இழப்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச கூட்டாண்மை என்ற உலக சாதனையைப் படைத்தனர். நூறு அடித்த பிரோட்டின் பெயர் லார்ட்ஸ் மட்டையாட்ட மாண்புப் பலகையில் இடம்பெற்றது.

2011 தொகு

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்வுத் தொடரின் 4 போட்டிகளில் மொத்தம் 25 மட்டையாளர்களை வீழ்த்தியிருந்தார். அதில் ஒரு மும்முறையும் அடங்கும். அத்தொடரை இங்கிலாந்து 4-0 என்ற கணக்கில் வென்றது. தொடர் நாயகன் விருதை பிரோட் பெற்றார்.[8]

2014 தொகு

இலங்கைக்கு எதிராக ஹெடிங்லே துடுப்பாட்டத் திடலில் நடந்த தேர்வுப் போட்டியில் பிரோட் 2வது முறையாக மும்முறை எடுத்தார். இதன்மூலம் தேர்வு வரலாற்றில் மும்முறை சாதனையை இருமுறை நிகழ்த்திய 4வது வீரரானார்.[9]

2018 தொகு

22 மார்ச் 2018இல் நியூசிலாந்துக்கு எதிரான தேர்வுப் போட்டியில் தனது 400வது வீழ்த்தலின் மூலம் 400 மட்டையாளர்களை வீழ்த்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.[10][11]

2019 தொகு

2019 ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் பிரோட் தனது ஆஷஸ் தொடர்களில் 100வது மட்டையாளரை வீழ்த்தினார்.[12] மேலும் அதே போட்டியில் தனது 450வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[13]

மேற்கோள் தொகு

  1. Stuart Broad. Nottingham Post. http://www.nottinghampost.com/Don-t-Malfoy-says-Broad-s-just-quidditch/story-25716505-detail/story.html. பார்த்த நாள்: 7 August 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Test match hat-trick takers". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 July 2011.
  3. "Broad claims young player award", from BBC. Retrieved 26 August 2006.
  4. "Pakistan ease to five-wicket win", Cricinfo report.
  5. England call up Broad for finals from BBC. Retrieved 7 February 2007
  6. England's Lewis departs World Cup, bbc.co.uk, 4 April 2007.
  7. Yuvraj belts six sixes in an over. Rediff.com (31 December 2004). Retrieved 3 August 2011.
  8. "England v India: Stuart Broad named man of the series following haul of 25 wickets". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  9. "England v Sri Lanka: Stuart Broad takes hat-trick at Headingley". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  10. "Stuart Broad takes his 400th Test wicket on day one of Auckland Test". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
  11. "Stuart Broad marches on to become the youngest fast bowler to race for 400 test wickets milestone". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 March 2018.
  12. "Stats: Steve Smith's record ton on Test comeback inspires Australia to a commanding total". Crictracker. 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 August 2019.
  13. "Broad makes Warner 450th Test wicket". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 3 August 2019.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Stuart Broad
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டூவர்ட்_பிரோட்&oldid=3229715" இலிருந்து மீள்விக்கப்பட்டது