கெவின் பீட்டர்சன்
கெவின் பீட்டர் பீட்டர்சன் ( Kevin Peter Pietersen பிறப்பு 27 ஜூன் 1980) ஒரு முன்னாள் இங்கிலாந்துத் துடுப்பாட்ட வீரர் ஆவார். ஒரு வலது கை மட்டையாளர் மற்றும் அவ்வப்போது எதிர்ச் சுழல் பந்து வீச்சாளராகவும் இவர் இருந்தார். 2005 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இங்கிலாந்திற்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது 20 போட்டிகளில் பீட்டர்சன் விளையாடியுள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கெவின் பீட்டர் பீட்டர்சன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | கே.பி, கேபிஸ்[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 4 அங் (1.93 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 626) | சூலை 21 2005 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சனவரி 3 2011 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 185) | நவம்பர் 28 2004 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | பிப்ரவரி 6 2011 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 24 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, பிப்ரவரி 9 2011 |
பீட்டர்சன் தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆப்பிரிக்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தைக்கும் மற்றும் இங்கிலாந்தினை பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் மகனாகப் பிறந்தார்.1997 ஆம் ஆண்டில் குவாசுலு நடால் துடுப்பாட்ட அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் அறிமுகமானார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றார். [3] ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதனால் பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு தகுதி பெற்றார். இவர் முதலில் ஆங்கில கவுண்டி துடுப்பாட்டத்தில் நான்கு ஆண்டு விளையாடினார். நாட்டிங்காம்சயர் அணிக்காக நான்கு ஆண்டுகள் விளையாடிய பின்னர் பீட்டர்சன் இங்கிலாந்து நாட்டின் தேசிய அணிக்காகத் தேர்வானார். சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் (ஒருநாள்) சர்வதேச அளவில் அறிமுகமானார். ஆத்திரேலியாவுக்கு எதிரான 2005 ஆசசு தொடரில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பீட்டர்சன் அறிமுகமானார் [4].
பீட்டர்சன் 2005 இல் ஹாம்ப்ஷயர் சென்றார். ஜூன் 2010 இல், பீட்டர்சன் ஹாம்ப்ஷயரை விட்டு வெளியேற விரும்புவதாக அறிவித்தார்[5] பீட்டர்சன் 2008 ஆகத்து 4 முதல் 2009 சனவரி 7 வரை இங்கிலாந்து தேர்வு மற்றும் ஒருநாள் அணிகளின் தலைவராக இருந்தார், ஆனால் அதே நாளில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இங்கிலாந்து பயிற்சியாளர் பீட்டர் மூர்சுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மூன்று தேர்வு மற்றும் ஒன்பது ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்[6] பீட்டர்சன் மே 31 அன்று அனைத்து வகையான சர்வதேச வரையறுக்கப்பட்ட துடுப்பாட்டத்தில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [7] [8] பின்னர் ஓய்வு பெற்றதைத் திரும்பப் பெற்ற போதிலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் இறுதி போட்டியில் இருந்து இவர் நீக்கப்பட்டார். [9] பீட்டர்சன் கடைசியாக இங்கிலாந்துக்காக 2013-14 ஆச்சு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுதென்னாப்பிரிக்காவின் நடால் மாகாணத்தில் உள்ள பீட்டர்மரிட்சுபர்க்கில் பீட்டர்சன் ஒரு ஆப்பிரிக்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தைக்கும் மற்றும் இங்கிலாந்தினை பூர்வீகமாகக் கொண்ட தாய்க்கும் மகனாகப் பிறந்தார்.[10] பீட்டர்சன் தனது மூன்று சகோதரர்களான டோனி, கிரெக் மற்றும் பிரையன் ஆகியோருடன் கடுமையான மற்றும் ஒழுக்கமான குழந்தைப் பருவத்தைக் கொண்டிருந்தார்; [11] பெற்றோரின் இந்த அணுகுமுறையிலிருந்து தான் பல நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்ட்தாகவும், ஒழுக்கம் ஒரு நல்ல குணம் என்றும், தான் விரும்பியதை தான் எப்போதும் வைத்திருக்க வேண்டியதில்லை என்று அது தனக்குக் கற்பித்ததாகவும் கூறும் அவர் எனக்குத் தேவையானது நான் விரும்பியதைவிட வித்தியாசமானது. என்றும் கூறியுள்ளார்[12] பீட்டர்சன் இங்கிலாந்து சங்கம் மற்றும் இரண்டாவது லெவன் துடுப்பாட்ட அணிக்காகவும் விளையாடினார்[13]. 11 வயதில் முன்கையில் ஏற்பட்ட ஒரு காயத்தினால் பீட்டர்சனுக்கு ரக்பி விளையாட முடியாமல் போனது. ஆனால் இவர் ஆக்கி, டென்னிசு மற்றும் சுகுவாசு ஆகிய போட்டிகள் விளையாடினார். இவை அவரது துடுப்பாட்டத்திற்கு மேலும் உதவின [14]
.
மேற்கோள்
தொகு- ↑ Wilde, Simon (8 February 2009). "Kevin Pietersen: Dumbslog millionaire". The Sunday Times (London). http://www.timesonline.co.uk/tol/sport/cricket/article5683117.ece. பார்த்த நாள்: 28 February 2009.
- ↑ Includes two matches for ICC World XI
- ↑ Kevin Pietersen biography, Cricinfo. Retrieved on 28 May 2007.
- ↑ Test Matches played by Kevin Pietersen, Cricketarchive. Retrieved on 28 May 2007.
- ↑ Dobell, George. "Kevin Pietersen set for Hampshire talks". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 17 June 2010.
- ↑ .
- ↑ .
- ↑ .
- ↑ "Pietersen dropped over text messages". 12 August 2012.
- ↑ Kevin Pietersen biography, Cricinfo. Retrieved on 28 May 2007.
- ↑ The Man with the Hair பரணிடப்பட்டது 2019-12-23 at the வந்தவழி இயந்திரம். Retrieved on 5 June 2007.
- ↑ Cooke, Rachel. "'I was up at six. I've a party to go to. So what is it you want?'", The Observer, 1 October 2006. Retrieved on 28 May 2007.
- ↑ "Pietersen looks for Essex move பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்", Guardian-Series, 27 July 2006. Retrieved on 31 May 2007.
- ↑ BT Sport (2017-12-25), Masterclass: KP, Gilchrist, Ponting and Vaughan on the art of attacking batting, பார்க்கப்பட்ட நாள் 2017-12-27