வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்)

(வாண்டுமாமா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வி. கிருஷ்ணமூர்த்தி (ஏப்ரல் 21, 1925 - சூன் 12, 2014)[2] சிறுவர் இலக்கிய எழுத்தாளர் ஆவார். வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வந்தவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர்.

வி. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு(1925-04-21)ஏப்ரல் 21, 1925
இறப்புசூன் 12, 2014(2014-06-12) (அகவை 89)
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி, கௌசிகன்
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுகுழந்தை எழுத்தாளர்
பெற்றோர்வேங்கடராமன், காந்திமதி[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் என்ற ஊரில் அந்தணக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் வாண்டுமாமா. இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். கௌசிகன் என்ற புனைபெயரில் பெரியவர்களுக்கு எழுதி வந்தார். ஆனந்த விகடன் இதழின் ஓவியர் மாலி இவரை சிறுவர் கதைகளை எழுதத் தூண்டினார். வாண்டுமாமா என்ற புனைபெயரை இவருக்கு சூட்டியவரும் இவர் தான். ஆனந்த விகடனில் இருந்து விலகிய பின்னர் திருச்சியில் இருந்து வெளிவந்த சிவாஜி என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியரானார். அவ்விதழின் சிறுவர் மலர் பகுதியில் சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதினார்.

பின்னர் வானவில் என்ற மாதமிருமுறை இதழிலும், கிண்கிணி என்ற குழந்தைகள் இதழிலும் பணியாற்றினார். பின்னர் கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். இக்காலகட்டத்திலேயே இவரது பெயர் குழந்தைகளிடையே புகழ் பெறத் தொடங்கியது. கோகுலம் பத்திரிகை வெளியீடு நிறுத்தப்பட்ட பின்னர் 1984 ஆம் ஆண்டில் பூந்தளிர், "பூந்தளிர் அமர் சித்திரக் கதைகள்" ஆகிய குழந்தைகள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1989 இல் இவ்வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. பூந்தளிர் மீண்டும் 1990 இல் வாண்டுமாமாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

வாண்டுமாமா 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ஓநாய்க்கோட்டை போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.

படைப்புகள்

தொகு

அகரவரிசையில் . . .

 1. அடிமையின் தியாகம்
 2. அதிசய நாய் (1988)
 3. அதிசய நாய் ராஜாவின் சாகசங்கள்
 4. அதிசயப் பிராணிகளின் அற்புதக் கதைகள்
 5. அதிசயப் பேனா
 6. அப்பா அப்பா கதை சொல்லு
 7. அம்மா அம்மா கதை சொல்லு
 8. அரசகுமாரி ஆயிஷா
 9. அவள் எங்கே?
 10. அழகி
 11. அழிந்த உலகம் (1988)
 12. அறிவியல் தகவல்கள் (மூன்று பாகங்கள்)
 13. அன்றிலிருந்து இன்றுவரை (இரண்டு பாகங்கள்) (1995)
 14. அன்றும் இன்றும்
 15. ஆடுவோமே! விளையாடுவோமே!
 16. இதையும் தெரிந்து கொள்ளுங்கள்
 17. இயந்திரங்கள் இயங்குவது எப்படி?
 18. இயற்கை அற்புதங்கள்
 19. இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்
 20. உலக அதிசயங்கள்
 21. உலகத்தின் கதை
 22. உலகம் சுற்றும் குழந்தைகள் (இரண்டு பாகங்கள்)
 23. உலகின் பழங்குடி மக்கள்
 24. உலோகங்களின் கதை
 25. எதிர்நீச்சல்
 26. ஒற்று உளவு சதி
 27. ஔவையார் அருளிய ஆத்திசூடி விளக்கம்
 28. ஔவையார் அருளிய கொன்றை வேந்தன் விளக்கம்
 29. கதை கதையாம் காரணமாம்
 30. கடலோடிகள்
 31. கடல்களும் கண்டங்களும்
 32. கண்ணாடி மனிதன்
 33. கதைக் களஞ்சியம்
 34. கழுகு மனிதன் ஜடாயு
 35. கனவா நிஜமா
 36. கானகத்தினுள்ளே குரங்குகள்
 37. கானகத்தினுள்ளே மான்கள்
 38. கானகத்தினுள்ளே விலங்குகள் (2002)
 39. குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் (இரண்டு பாகங்கள்)
 40. குழந்தைகளுக்கு பலதேசக் கதைகள் (ஐந்து பாகங்கள்)
 41. குள்ளன் ஜக்கு
 42. க்விஸ் க்விஸ் க்விஸ் (இரண்டு பாகங்கள்)
 43. சந்திரனே சாட்சி
 44. சதுரநீதி நூல்கள் (மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியவை பற்றி)
 45. சரித்திரச் சம்பவங்கள்
 46. சித்திரக் கதைகள் (இரண்டு பாகங்கள்)
 47. சி.ஐ.டி சிங்காரம்
 48. சுழிக்காற்று
 49. சூரியக் குடும்பம்
 50. டாக்டர் ராதாகிருஷ்ணன்
 51. தகவல் புதையல் (இரண்டு பாகங்கள்)
 52. தங்கச் சிலை
 53. தப்பியோடியவர்கள்
 54. தவளை இளவரசி
 55. தாத்தா தாத்தா கதை சொல்லு
 56. துப்பறியும் புலிகள்
 57. தெரிந்து கொள்ளுங்கள்
 58. தெரியுமா தெரியுமே
 59. தேதியும் சேதியும்
 60. தோன்றியது எப்படி? (நான்கு பாகங்கள்)
 61. நமது உடலின் மர்மங்கள்
 62. நாய் வளர்ப்பு
 63. நிலம் நீர் காற்று
 64. நிலாக்குதிரை
 65. நீங்களும் மந்திரவாதி ஆகலாம்
 66. நீங்களே செய்யலாம் (இரண்டு பாகங்கள்)
 67. நீதிநெறி நூல்கள்
 68. நீலப்போர்வை (1987)
 69. நெருப்புக் கோட்டை (1988)
 70. பச்சைப் புகை
 71. பரவசமூட்டும் பறவைகள்
 72. பல தேசத்துப் பண்பாட்டுக் கதைகள்
 73. பலே பாலுவும் பறக்கும் டிராயரும்
 74. பாட்டி பாட்டி கதை சொல்லு
 75. பாமினிப் பாவை
 76. பாரதப் பண்டிகைகள்
 77. புதிய சைக்கிள் (1992)
 78. புதையல் வேட்டை
 79. புலிக்குகை
 80. புலி வளர்த்த பிள்ளை
 81. பூனை வளர்ப்பு
 82. பெண் சக்தி
 83. பைபிள் பாத்திரங்கள் (1989)
 84. மந்திரச் சலங்கை
 85. மரகதச்சிலை
 86. மருத்துவம் பிறந்த கதை
 87. மர்ம மனிதன்
 88. மர்ம மாளிகையில் பலே பாலு
 89. மலைக்குகை மர்மம்
 90. மாதர்குல திலகங்கள்
 91. மாயச் சுவர்
 92. மாய மோதிரம்
 93. மாயாவி இளவரசன்
 94. மீன் வளர்ப்பு
 95. மான்கள்
 96. முதலுதவி
 97. முன்னேற்றத்தின் முன்னோடிகள் (முதல் தொகுதி)
 98. முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டாம் தொகுதி)
 99. மூளைக்கு வேலை (இரண்டு பாகங்கள்)
 100. மூன்று விரல்கள் (1991)
 101. மூன்று வீரர்கள் (1983); பழனியப்பா பிரதர்சு, சென்னை.
 102. மெழுகு மாளிகை
 103. மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
 104. மேஜிக் மாலினி
 105. ரத்தினபுரி ரகசியம்
 106. யானைகள்
 107. யோகா
 108. ராஜாஜி
 109. வண்டுகளே உங்களைத்தான்
 110. வயலின் வசந்தா
 111. வரலாறு படைத்த வல்லுநர்கள் (2003)
 112. வாண்டுமாமாவின் வரலாற்றுக் கதைகள்
 113. விந்தை விநோதம் விசித்திரம்
 114. விண்வெளி வாழ்க்கை
 115. விளையாட்டு விநோதங்கள்
 116. வீர விஜயன்
 117. வேடிக்கை விளையாட்டு விஞ்ஞானம்
 118. ஷீலாவைக் காணோம்
 119. ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள்
 120. ஹோமரின் இலியத் - கிரேக்க புராணக் கதைகள்
 121. ஜுலேகா (இரண்டு பாகங்கள்) - வரலாற்றுப் புனைகதை - தினமணி கதிர் தொடர்
 122. ஸ்ரீமத் பாகவதம்

சிறுகதைகள்

தொகு
 • நூறு கண் ராட்சதன்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்

தொகு

இவர் எழுதிய பல நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "இதே நாளில் அன்று". தினமலர். 2022-04-21. Archived from the original on 2022-04-21. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
 2. "எழுத்தாளர் வாண்டு மாமா காலமானார்". தினகரன். 14 சூன் 2014. Archived from the original on 2014-06-14. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2014.

வெளி இணைப்புகள்

தொகு