தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1976
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1976 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1976 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. பூமலை (முதல் பரிசு) 2. தாய்மண் (இரண்டாம் பரிசு) |
1. காவிரிநாடன் 2. வா. மு. சேதுராமன் |
1. பாப்பா பதிப்பகம், சென்னை. 2. கவியரசன் பதிப்பகம், சென்னை. |
2 | நாவல் | கரிசல் (முதல் பரிசு) | பொன்னீலன் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1.இஸ்லாமும் இன்பத்தமிழும் (முதல் பரிசு) 2. இலக்கியத் திறனாய்வு (இரண்டாம் பரிசு) |
1. எம். எம்.உவைஸ் 2. சு. பாலச்சந்திரன் |
1. யுனிவர்சல் பப்ளிசர்ஸ் அண்டு புக் செல்லர்ஸ், சென்னை. 2. அணியகம், சென்னை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | ----- | ----- | ----- |
5 | குழந்தை இலக்கியம் | தோன்றியது எப்படி? (இரண்டு தொகுதிகள்) (முதல் பரிசு) | வாண்டு மாமா | வானதி பதிப்பகம், சென்னை. |
6 | தமிழ், தமிழ்ப்ப்ண்பாடு பற்றிப் பிற மொழிகளில் வெளியான நூல்கள் | 1. Tradition and Talent in Sangam Poetry (முதல் பரிசு) 2.Muslim Epics in Tamil Literaure (இரண்டாம் பரிசு) |
1. இராம. பெரியகருப்பன் (தமிழண்ணல்) 2.டாக்டர் எம். எம். உவைஸ். |
1. மதுரை பபளிஷிங் ஹவுஸ், மதுரை 2.செம்மல் பப்ளிகேசன்ஸ், சென்னை. |
7 | பொறியியல், தொழில்நுட்பவியல் | ரேடியோ மெக்கானிசம் அண்டு ரிப்பேரிங் (முதல் பரிசு) | வே. கோவிந்தசாமி | ஜெமினி ரேடியோ டெலிவிசன் இன்ஸ்டிடியூட், சென்னை. |
8 | சிறுகதை | குற்றம் பார்க்கில் (முதல் பரிசு) | சு. சமுத்திரம் | கல்வி வெளியீடு, சென்னை. |