தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2005

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 2,000 மற்றும் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் நூலின் பிரிவு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 மரபுக்கவிதை பார்சுவநாத காவியம் புலவர் தோ. ஜம்புகுமாரன் ஜைன இளைஞர் மன்றம், சென்னை.
2 புதுக்கவிதை தேவதேவன் கவிதைகள் தேவதேவன் தமிழினி, சென்னை.
3 புதினம் கூகை சோ. தர்மன் காலச்சுவடு பதிப்பகம்,நாகர்கோவில்.
4 சிறுகதை வாஸந்தி சிறுகதைகள் வாஸந்தி வானதி பதிப்பகம், சென்னை.
5 நாடகம் (உரைநடை, கவிதை ) மாவீரன் சுந்தரலிங்கத் தேவேந்திரர் கவிஞர் நந்திவர்மன் ஜீவன் நர்மதா பதிப்பகம், சென்னை.
6 சிறுவர் இலக்கியம் பழைய கதைகளில் புதிய பார்வை புலவர் சே. மாணிக்கம் சிவா பதிப்பகம், தஞ்சாவூர்.
7 திறனாய்வு தமிழ் இலக்கியங்கள் கட்டவிழ்ப்பும் கூட்டமைப்பும் முனைவர் எல். இராமமூர்த்தி காவ்யா பதிப்பகம், சென்னை.
8 மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் யாப்பறிந்து பாப்புனைய மருதூர் அரங்கராசன் அரங்க சரஸ்வதி, நெய்வேலி.
9 பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் அம்மன்கிளி முருகதாஸ் குமரன் புத்தக இல்லம், சென்னை.
10 நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) ந. முத்துசாமி கட்டுரைகள் ந. முத்துசாமி காவ்யா பதிப்பகம், சென்னை.
11 அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் திருக்குறள் சொற்பொருள் காபி புலவர் என். வி. கலைமணி வள்ளலார் நூலகம், சென்னை.
12 பயண இலக்கியம் ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள் கி. இராகவசாமி மணிமேகலை பிரசுரம், சென்னை.
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் நெல்லை சு. முத்து வாலன்டினா பப்ளிகேசன்ஸ், சென்னை.
14 நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு கடல்வழி வணிகம் கே. ஆர். நரசய்யா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
15 கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் தமிழரின் வணிகவியல் கோட்பாடுகள் முனைவர் பெ. துரைசாமி அறிவன் பதிப்பகம், தஞ்சாவூர்.
16 பொறியியல், தொழில்நுட்பம் ----- ----- -----
17 மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) பரதவர் இன் மீட்டுருவாக்க வரைவியல் முனைவர் அரு. பரமசிவம் காவ்யா பதிப்பகம், சென்னை.
18 சட்டவியல், அரசியல் அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் பேராசிரியர் ஆ. சந்திரசேகரன் சி. சீதாராமன் அன் கோ, சென்னை.
19 பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் காசோலைகள் எம். ராமச்சந்திரன் வசந்த் பதிப்பகம், சென்னை.
20 மருந்தியல், உடலியல், நலவியல் மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவம் பேராசிரியர் அ. ராஜசேகரன், கோ. இராமநாதன் மார்க் வெளியீடு, சென்னை.
21 தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) அனுபோக வைத்தியத் திரட்டு அறந்தாங்கி டாக்டர் சுப. சதாசிவம் வானதி பதிப்பகம், சென்னை.
22 சமயம், ஆன்மீகம், அளவையியல் இலங்கையில் இந்து சமயம் பேராசிரியர் சி. பத்மநாபன் குமரன் புத்தக இல்லம், சென்னை.
23 கல்வியியல், உளவியல் தமிழ்நாட்டில் கல்வி அன்றும் இன்றும் கருப்பூர் மு. அண்ணாமலை அம்மன் புத்தகக் குழுமம், சென்னை.
24 வேளாண்மையியல், கால்நடையியல் ஏலக்காய் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே தி. ச. சாமண்டிதாசு மணிமேகலை பிரசுரம், சென்னை.
25 சுற்றுப்புறவியல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முனைவர். ந. க. மங்கள முருகேசன் தென்றல் பதிப்பகம், சென்னை.
26 கணிணியியல் சித்திரமும் மவுஸ் பழக்கம் ஜெ. வீரநாதன் பாலாஜி கணினி வரைகலை பயிலகம், சென்னை.
27 நாட்டுப்புறவியல் காவடியாட்டம் முனைவர் கு. முருகேசன் தேன்மொழி பதிப்பகம், தஞ்சாவூர்
28 வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் நீலக்கடல் நாகரத்தினம் கிருஷ்ணா சந்தியா பதிப்பகம், சென்னை
29 இதழியல், தகவல் தொடர்பு மூன்றாவது கண் நா. அனந்தபத்மநாபன் கிழக்குப் பதிப்பகம், சென்னை.
30 பிற சிறப்பு வெளியீடுகள் பெண்சக்தி கௌசிகன் கங்கை புத்தக நிலையம், சென்னை.
31 விளையாட்டு தேக்வாண்டோ கற்றுக் கொள்ளுங்கள் மாஸ்டர் பெ. சேகர் காஞ்சிபுரம் மாவட்ட தேக்வாண்டோ சங்கம், சென்னை.

குறிப்புகள்

  • பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.
  • பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்ற நூலாசிரியர் அம்மன்கிளி முருகதாஸ் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்ற நூலாசிரியர் பேராசிரியர் சி. பத்மநாபன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்ற நூலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல்களுக்கான பரிசுகளுக்கான விதி 19ன்படி பரிசுத் தொகை வழங்கும் நிலை இல்லை. இவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மட்டும் வழங்கப் பெற்றன.