அம்மன்கிளி முருகதாஸ்

ஈழத்து எழுத்தாளர்

அம்மன்கிளி முருகதாஸ் என்பவர் ஒரு ஈழத்து எழுத்தாளர் ஆவார். சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், பெண்ணிய விமர்சனம், நாடக இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஈடுபாடுடையவர். இவைகள் தொடர்பான கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.

அம்மன்கிளி முருகதாஸ்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

அம்மன்கிளி முருகதாஸ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று தனது இளங்கலை, முதுகலை கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும், முதுகலை பட்ட இணைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.[1]

பேராசிரியர் கா. சிவத்தம்பியின் "Drama in Ancient Tamil Society" என்ற ஆங்கில நூலினை "பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்" என மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

எழுதிய நூல்கள் தொகு

  • ஈழத்து தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம் (குமரன் புத்தக இல்லம், 2007)
  • சங்கக் கவிதையாக்கம் - மரபும் மாற்றமும் (குமரன் புத்தக இல்லம், 2006)
  • பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (மொழிபெயர்ப்பு, குமரன் புத்தக இல்லம், 2005)

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்கிளி_முருகதாஸ்&oldid=3231815" இலிருந்து மீள்விக்கப்பட்டது