கி. இராகவசாமி

கி. இராகவசாமி (பிறப்பு: நவம்பர் 1, 1937) என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். காரைக்காலில் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவராக இருந்து வருகிறார். நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1970 ஆம் ஆண்டில் சுழற்சங்கத்தில் (ரோட்டரி) உதவி ஆளுநராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். சிறந்த சேவைகளுக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "ஒரு தமிழரின் அமெரிக்கப் பயண அனுபவங்கள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்தொகு

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._இராகவசாமி&oldid=1297470" இருந்து மீள்விக்கப்பட்டது