நந்திவர்மன் ஜீவன்

நந்திவர்மன் ஜீவன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை அனுப்பானடியில் பிறந்த இவர் வழக்குரைஞர் பட்டம் பெற்றவர். வழக்குரைஞர், நாடகநடிகர், நாடக ஆசிரியர், நாடகத் தயாரிப்பாளர், நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர் என பல சிறப்புகளைப் பெற்ற இவர் குடியரசுத் தலைவர் விருது பெற்ற மோகமுள் மற்றும் பாரதி திரைப்படங்களிலும், முகம் திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருப்பதுடன் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவர் எழுதிய "மாவீரன் சுந்தரலிங்கத் தேவேந்திரர்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை ) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திவர்மன்_ஜீவன்&oldid=2765762" இருந்து மீள்விக்கப்பட்டது