எல். இராமமூர்த்தி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ். இராமமூர்த்தி என்பவர் ஒரு புதுச்சேரி எழுத்தாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நான்கரை ஆண்டு காலம் இயக்குநர் பொறுப்பிலிருந்தவர். தற்போது மொழியியல் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். ஆங்கிலத்தில் 2 நூல்களையும், தமிழில் 3 நூல்களையும் என 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "தமிழ் இலக்கியங்கள் கட்டவிழ்ப்பும் கூட்டமைப்பும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.