மருதூர் அரங்கராசன்
மருதூர் அரங்கராசன் (பிறப்பு: திசம்பர் 9, 1952) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ச. அரங்கராசன் எனும் இயற்பெயருடைய இவர் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியின் முதல்வர். ஆராய்ச்சி தொடர்பான 7 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "யாப்பறிந்து பாப்புனைய" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.