எம். ராமச்சந்திரன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தேனி மாவட்டம் சின்னமனூர் எனும் ஊரில் பிறந்து சென்னையில் வசித்து வரும் இவர் அரசியல், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும், ஆசிரியர் பயிற்சி, வங்கியாளர்களுக்கான பட்டமும் பெற்றவர். சென்னை சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் 30 ஆண்டுகள் பணியாற்றி தலைமை அதிகாரியாக பணி நிறைவு பெற்றவர். “ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி”” எனும் தலைப்பில் பல நகரங்களில் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த ஆ. ப. ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "காசோலைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.