அரிமளம்
அரிமளம் (ஆங்கிலம்:Arimalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அரிமளம் | |||||||
அமைவிடம் | 10°16′N 78°54′E / 10.27°N 78.9°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | புதுக்கோட்டை | ||||||
வட்டம் | திருமயம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | எம். அருணா, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
8,948 (2011[update]) • 974/km2 (2,523/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
9.19 சதுர கிலோமீட்டர்கள் (3.55 sq mi) • 66 மீட்டர்கள் (217 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/arimalam |
அமைவிடம்
தொகுதிருமயம் வட்டத்தில் அமைந்த அரிமளம் பேரூராட்சி, புதுக்கோட்டை மற்றும் திருமயத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு9.19 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருமயம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,184 வீடுகளும், 8,948 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 10°16′N 78°54′E / 10.27°N 78.9°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 66 மீட்டர் (216 அடி) உயரத்தில் இருக்கின்றது.
வரலாறு
தொகுசங்க காலத்தில் இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி பசும்பூண் பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் 'நெடுமிடல்' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி காவிரியாற்றின் வடகரையிலுள்ள 'நீடூர்' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது)[8].
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அரிமளம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Arimalam Population Census 2011
- ↑ Arimalam Town Panchayat
- ↑ "Arimalam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
- ↑ \ பரணர் - அகநானூறு 266