நெடுமிடல்
நெடுமிடல் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் இருவர் காணப்படுகின்றனர்.
- களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர வேந்தனால் வீழ்த்தப்பட்டவன்.
- அரிமளம் ஊரை அடுத்திருந்த நாட்டை ஆண்டவன். சோழ பாண்டியர் கூட்டு முயற்சியால் வீழ்த்தப்பவன்.
- நெடுமிடல் என்னும் அரசன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னனால் வீழ்த்தப்பட்டன். [1]
- எவ்வி ஏவலின்படி பகைவர் செடுமிடலை வீழ்த்தினர். வீழ்த்தியவர் அரிமணவாயில் உறத்தூர் என்னுமிடத்தில் உண்டாடி மகிழ்ந்தனர். இவனை வீழ்த்தியவர் பெயர் பசும்பூண் எனக் குறிப்பிடப்படுவதால் பசும்பூண் கிள்ளிவளவன் என்னும் சோழ வேந்தனாகவோ, பசும்பூண் பாண்டியன், பசும்பூண் செழியன் என்னும் பாண்டிய வேந்தர்களில் ஒருவனாகவோ இருத்தல் வேண்டும். அல்லது சோழர், பாண்டியர் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்தும் வீழ்த்தியிருக்கலாம். [2]