எவ்வி

சங்ககாலத்துக் குறுநில மன்னன்

எவ்வி சங்ககாலத்துக் குறுநில மன்னன். இவன் சிறந்த வள்ளலும் ஆவான்.

எவ்வி என்னும் சொல்லின் பொருள்

ஆற்றில் ஓடும் நீரை மேட்டுநிலங்களுக்குப் பாய்ச்ச ஏற்றத்தைப் பயன்படுத்துவர். அந்த ஏற்றத்தைக் குறிக்கும் சொல் எவ்வி. ஏற்றம் போல் மக்களை ஈடேற்றுபவன் என்பது இவனது பெயருக்கு உள்ள விளக்கம். உண்மையில் இந்த அரசன் தன் பெயர் தரும் விளக்கத்துக்கு ஏற்ப விளங்கியதை இவனது வரலாறு காட்டுகிறது.

எவ்வியை நேரில் கண்டு பாடிய புலவர் வெள்ளெருக்கிலையார். பிற புலவர்கள் இவனைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

கபிலர் - புறம் 202,
குடவாயிற் கீரத்தனார் - அகம் 366,
நக்கீரர் - அகம் 126,
பரணர் - குறுந்தொகை 19, அகம் 266,
மாங்குடி கிழார் - புறம் 24,
மாமூலனார் - அகம் 115,
வெள்ளெருக்கிலையார் - புறம் 233, புறம் 234,

எவ்வி பற்றிய செய்திகள்

தொகு

மயிலை சீனி. வேங்கடசாமி அவரிகளின் பண்டைத் தமிழக வரலாறு  - சேரர், சோழர், பாண்டியர்

நீடூர் கிழவன்

தொகு
மிழலை] நாட்டு அரசன். நீடூர் இவன் நாட்டின் தலைநகர்..அதனால் இவன் “நீடூர் கிழவன்” எனப் படுகிறான். இவனது ஊர் நீடூர் என்பது.தற்போது "நீடாமங்கலம்" என்று வழங்குகிறது. 

மிழலைக் கூற்றம் அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது.திருப் பெருந்துறை என்னும் ஆவுடையார்கோவில் வட்டாரப் பகுதிகள் மிழலை நாடு என்று அழைக்கப் பட்டதற்கான சான்றுகள் உள்ளன.கடற்கரைவரை இந்தநாடு பரவி இருந்தது.


வேள் எவ்வி எனவும், நீடூர் கிழவன் எனவும் இவன் போற்றப்படுகிறான்.
வேளிர் குடியைச் சேர்ந்தவன் என்று கபிலர் இவனைக் குறிப்பிடுகிறார். == பசும்பூண் பொருந்திலர் என்பவரை வென்றவன் ==


ஒருமுறை இவன் தன் ஏவலைக் கொள்ளாது பகைத்த பசும்பூண் பொருந்திலர் என்பவரை நெடுமிடல் அஞ்சியின் உதவியுடன் வென்றார். அவர்க்குரிய அரிமணம் உறத்தூர் என்பன புதுக்கோட்டை வட்டத்தில் உள்ளன. அரிமணம் இப்போது அரிமளம் என வழங்குகிறது.

வாய்வாள் எவ்வி

தொகு

இவன் வாய்வாள் எவ்வி எனச் சிறப்பபிக்கப்படுவதால், வாட்போரில் வல்லவன் எனத் தெரிகிறது.

நாட்டு மக்களும் வள்ளண்மைக் குணம் மிக்கவர்கள்

தொகு

இவனது ஆட்சி நிழல் குளுமையாக இருக்கும் என்றும், இவனது நாட்டு முதியவர்கள் உப்பு விற்க வரும் நுளையர்களுக்குத் தேறல் தந்து மகிழ்விப்பார்கள் என்றும் ஒரு புலவர் குறிப்பிடுகிறார். இதனால் இவனது நாட்டு மக்களும் வள்ளண்மைக் குணம் மிக்கவர்கள் எனத் தெரியவருகிறது..

பாண்மகள் எவ்வி நாட்டில் தன் உப்புக்குப் பண்டமாற்றாக நெல்லைத் தந்தால் வாங்கமாட்டாளாம். முத்துக்களைத் தந்தால்தான் வாங்கிக்கொள்வாளாம். அந்த அளவுக்கு அவன் நாடு செல்வ வளம் மிக்கது.

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவனது நாட்டைத் தனதாக்கிக் கொண்டபின் தொன்முது வேளிர் ஆண்ட முத்தூரையும் கைப்பற்றிக்கொண்டான். [1]

எவ்வியின் மறைவு

தொகு

எவ்வியின் முன்னோன் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்ததன் பயன் எவ்வியின் தொல்குடி இவனோடு அழிந்தது என்கிறார் கபிலர்.

எவ்வி சிறந்த வள்ளல். அவன் மார்பில் புண்பட்டு வீழ்ந்தான் எனப் பேசிக்கொண்டனர். இது பொய்யாக இருக்கக் கூடாதா, அன்று ஒருநாள் அகுதை மார்பில் இரும்புச்சக்கரம் பாய்ந்தது என்று பேசிக்கொண்டனரே. அது பொய்யாய்ப் போகவில்லையா? அதுபோல் எவ்வி வீழ்ந்தான் என்பதும் பொய்யாகக் கூடாதா, - என்று ஒரு புலவர் கலங்குகிறார். பின்னர் எவ்வி உண்மையாகவே இறந்துபோனது கண்டு பலரோடு கூடி உண்ட எவ்வி வாயில் வாய்க்கரிசி போடுகிறார்களே! அவன் உண்பானா என்றும் சொல்லி அழுகிறார் வெள்ளெருக்கிலையார்.

எவ்வி மாண்டபோது பாணர்கள் தலையில் பூச் சூடிக்கொள்ளவில்லையாம்.
எவ்வி மாண்டு கிடந்த போர்க்களத்தில் பாணர்கள் தம் வளைந்த கொம்புகளை ஊதாமல் கீழே போட்டு வணக்கம் செலுத்தினார்களாம்.

எவ்வி சொன்னதைக் கேளாமல் அன்னி என்பவன் திதியன் என்பவனோடு போரிட்டு மாண்டான்.

மேற்கோள்

தொகு
  1. பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,
    குப்பை நெல்லின், முத்தூறு தந்த
    கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! புறநானூறு 24

24-ம் புறப்பாட்டில்-- " முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய ஓம்பா வீகை மாவேள் எவ்வி புனலம் புதவின் மிழலை"

"https://ta.wikipedia.org/w/index.php?title=எவ்வி&oldid=4043096" இலிருந்து மீள்விக்கப்பட்டது