தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2010
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 30,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், பதிப்பகத்தினருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் 2010 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | நூலின் பிரிவு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | மரபுக்கவிதை | அபராஜிதவர்ம பல்லவன் | மா. இராமமூர்த்தி | கோதை பதிப்பகம், தருமபுரி. |
2 | புதுக்கவிதை | கோடிட்ட இடங்களை நிரப்புக | சுமதிராம் | வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. |
3 | புதினம் | தோல் | டி. செல்வராஜ் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
4 | சிறுகதை | நிரம்பித் ததும்பும் மௌனம் | நா.விசுவநாதன் | அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை. |
5 | நாடகம் (உரைநடை, கவிதை ) | ஜெயந்தன் நாடகங்கள் | ஜெயந்தன் | வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. |
6 | சிறுவர் இலக்கியம் | வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள் | ம. லெனின் | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ், சென்னை. |
7 | திறனாய்வு | நாயன்மார் கதைகள் - பெரிய புராணமும் ஹரிஹரன ரகளைகளும் | அ. சங்கரி | காவ்யா பதிப்பகம், சென்னை. |
8 | மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் | குறுந்தொகை பதிப்பு வரலாறு (1915-2010) | இரா.தாமோதரன் (அறவேந்தன்) | காவ்யா பதிப்பகம், சென்னை. |
9 | பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் | மருந்து | க.ராமன் (கேரளா) | நியூ ஹொரைசன் மீடியா (பி)லிட்., சென்னை. |
10 | நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) | இராஜராசேச்சரம் | முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியன் | முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர். |
11 | அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் | தமிழ் நாடகக் (குறுங்)கலைக்களஞ்சியம் | வெ.மு.ஷாஜகான்கனி | ஓவியம் பதிப்பகம், மதுரை. |
12 | பயண இலக்கியம் | பாரத தரிசனம் | சிவசங்கரி | வானதி பதிப்பகம், சென்னை. |
13 | வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு | இந்த பூமியில் நான் கழித்த பொழுதுகள் | ப. உமாபதி | அகரம், தஞ்சாவூர். |
14 | நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு | நம் தேசத்தின் கதை | சி.எஸ். தேவ்நாத் | நர்மதா பதிப்பகம், சென்னை. |
15 | கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் | கணிதம் கற்பிக்கும் முறைகள்-1 | டாக்டர் வி. நடராஜன் | சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை. |
16 | பொறியியல், தொழில்நுட்பம் | அன்றும் இன்றும் | வி. கே. மூர்த்தி (வாண்டுமாமா) | கங்கை புத்தக நிலையம், சென்னை. |
17 | மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) | அனுபவங்களின் நிழல் பாதை | ரெங்கையா முருகன், ஹரிசரவணன் | வம்சி புக்ஸ், திருவண்ணாமலை. |
18 | சட்டவியல், அரசியல் | அன்றாட வாழ்வில் சட்டங்கள் | ஏ.பி. ஜெயச்சந்திரன் | மணிமேகலை பிரசுரம், சென்னை. |
19 | பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் | ஆளுமை மேம்பாடு | முனைவர் இரா. சாந்தகுமாரி, ந. வைரவராஜ் | சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை. |
20 | மருந்தியல், உடலியல், நலவியல் | வலிப்பு நோய்கள் | மருத்துவர் ஜே.பாஸ்கரன் | நியூ ஹொரைசன் மீடியா (பி)லிட்., சென்னை. |
21 | தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) | மறைவாக நமக்குள்ளே | டாக்டர். பொ. இரா. இராமசாமி | பிரார்த்தனா வெளியீட்டகம், விருதுநகர். |
22 | சமயம், ஆன்மீகம், அளவையியல் | பொற்றாமரை | முனைவர் அம்பை. லோ. மணிவண்ணன் | ஏ. ஆர். பதிப்பகம், மதுரை. |
23 | கல்வியியல், உளவியல் | மனம் ஒரு புதையல் | க. ராஜகோபாலன் | கங்கை புத்தக நிலையம், சென்னை. |
24 | வேளாண்மையியல், கால்நடையியல் | எல்லோருக்கும் எப்போதும் உணவு | பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |
25 | சுற்றுப்புறவியல் | ----- | ----- | ----- |
26 | கணிணியியல் | தமிழ் விக்கிப்பீடியா | எம்.சுப்பிரமணி | மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். |
27 | நாட்டுப்புறவியல் | நாட்டுப்புறப் பாடல்களும் நல்லெண்ணெயும் | குரு. சண்முகநாதன் | சங்கீதா வெளியீட்டகம், திருநெல்வேலி. |
28 | வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் | ----- | ----- | ----- |
29 | இதழியல், தகவல் தொடர்பு | ----- | ----- | ----- |
30 | விளையாட்டு | ----- | ----- | ----- |
31 | பிற சிறப்பு வெளியீடுகள் | அறிவியல் வரலாறு (மூன்று பாகங்கள்) | முனைவர் நெல்லை சு. முத்து | திருவரசு புத்தக நிலையம், சென்னை. |
குறிப்புகள்
- சுற்றுப்புறவியல், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம், இதழியல், தகவல் தொடர்பு மற்றும் விளையாட்டு ஆகிய 4 தலைப்புகளில் புத்தகம் ஏதும் தேர்வு செய்யப்படவில்லை.
ஆதாரம்
தொகு- தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு எண்:254, நாள்:10-04-2012 (பி.டி.எப். கோப்பு)
வெளி இணைப்புகள்
தொகு- பரிசு பெறும் நூல்கள் (தினமணி)
- புத்தாண்டு விழாவில் 27 நூல்களுக்கு விருது - பரிசு (தினபூமி)
- தமிழக அரசு பரிசு பெறும் நூல்கள் விவரம் பரணிடப்பட்டது 2012-04-13 at the வந்தவழி இயந்திரம் (மாலை மலர்)
- பதிப்பகங்களுக்கு ரூ.10,000: சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ.30,000 பரிசு[தொடர்பிழந்த இணைப்பு] (நிதி & முதலீடு)