குடவாயில் பாலசுப்பிரமணியன்

குடவாயில் பாலசுப்பிரமணியன் (பிறப்பு: 15 சூன் 1948) தமிழ்நாட்டின் கல்வெட்டு ஆய்வாளர்களில் ஒருவரும் எழுத்தாளரும் ஆவார்.

குடவாயில் பாலசுப்பிரமணியன்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

குடவாயில் பாலசுப்ரமணியன், திருவாரூர் மாவட்டம், குடவாயில் வட்டம், பெருமங்கலம் என்ற ஊரில் முனுசாமி சோழகர், அபயாம்பாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., வரலாறும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்ஃபில் வரலாறும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி., கட்டடக்கலையும் பயின்றவர். [1]

கோயிற்கலைக்கும் தமிழ்மொழிக்கும் ஆற்றிவரும் பணிக்காக பிப்ரவரி 2016இல் இவர் முதுமுனைவர் பட்டம் (Doctor of Letters (honoris causa)) பெற்றார்.[2]

கல்வி, ஆய்வுப்பணி

தொகு

இவர் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் பதிப்பக மேலாளராக பல ஆண்டுகளாக பணிபுரிந்து உள்ளார்.[3] இவர் 100க்கும் மேற்பட்ட பழங்கால கல்வெட்டுக்களையும், பழங்கால நாணயங்கள், செப்புத் தகடுகள், சிலைகள் போன்ற பலவற்றைக் கண்டுபிடித்து தமிழக கல்வெட்டு ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளார். 25க்கும் மேற்பட்ட நூல்களும் 300க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள்

தொகு

இவர் திருவாரூர் திருக்கோயில், தஞ்சாவூர், ராஜராஜச்சுரம், நந்திபுரம், கபிலக்கல், தஞ்சை நாயக்கர் வரலாறு உள்பட, 25க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.[4]

  1. குடவாயிற்கோட்டம், தொல்லியல், வரலாற்றியல், கல்வெட்டியல் ஆய்வு மையம், சென்னை, 1978
  2. கருணாகரத் தொண்டைமான், தொல்லியல், வரலாற்றியல், கல்வெட்டியல் ஆய்வு மையம், சென்னை, 1979
  3. ஆரூர் ஆழித்தேர், தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை, 1989
  4. நந்திபுரம், கலை மற்றும் பண்பாட்டிற்கான இந்திய தேசிய டிரஸ்ட், சென்னை, 1992
  5. திருவாரூர் திருக்கோயில், தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை, 1988, அகரம் 2012 (தமிழ்ப்பல்கலைக்கழக விருது, 1988)
  6. தமிழகக் கோயிற்கலை மரபு, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1993 (இரண்டாம் பதிப்பு 2000)
  7. தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007, 1995 (தமிழக அரசு விருது) [5]
  8. சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987
  9. குடமுழா, அஞ்சனா பதிப்பகம், 6, நிர்மலா நகர், வல்லம் சாலை, தஞ்சாவூர் 613 007, 1997
  10. தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர், 1999
  11. தஞ்சைப் பெரிய கோயில், 2002
  12. கோபுரக்கலை மரபு, கோயிற்களஞ்சியம், 6, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007, 2004 [6]
  13. வரலாற்றில் வல்லம், 2003.
  14. ஜெயங்கொண்டநாதர் கோயில், 2004.
  15. கபிலக்கல், பிரபு பதிப்பகம், பட்டுக்கோட்டை, 2004
  16. அரதைப்பெரும்பாழி, 2005.
  17. குடந்தை பெரிய மடம், 2005.
  18. இராஜராஜேச்சரம், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் 612 610, 2010 [7] (தமிழக அரசு விருது, 2012)
  19. தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, திருவாரூர் மாவட்டம் 612 610, 2013 [8]
  20. கலையியல் ரசனைக் கட்டுரைகள், அகரம், தஞ்சாவூர், 2014
  21. கல்வெட்டு கூறும் கோயில் கதைகள், சூரியன் பதிப்பகம், சென்னை, 2016.
  22. இராஜேந்திர சோழன் (வெற்றிகள்-தலைநகரம்-திருக்கோயில்), அன்னம், தஞ்சாவூர் [9]
  23. அரிய செய்திகள் கூறும் அற்புத ஆலயங்கள், அகரம், தஞ்சாவூர், 2020 [10]
  24. கலைமிகு கோயில்களும் கல்வெட்டு சாசனங்களும், அகரம், தஞ்சாவூர், 2020.[11]
  25. தேவார மாண்பும் ஓதுவார் மரபும், அன்னம், தஞ்சாவூர் [12] [13]
  26. தமிழக மரபுச் சுவடுகள், அன்னம், தஞ்சாவூர், 2021 [14]
  27. சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும், அன்னம், தஞ்சாவூர், 2021 [15]

திட்டங்கள்

தொகு
  • கும்பகோணம், (ஒரு பகுதி), வரலாற்று ஆய்வுத்திட்டம், Cambridge University, London
  • கோயில் கோபுரங்கள், Nehru Trust for the Indian Collections at the Victoria and Albert Museum in London, New Delhi
  • சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழக குறுகிய கால ஆய்வுத்திட்டம் (நூலாக வெளியானது)
  • செம்மொழி இலக்கியங்களில் பல்கலை நோக்கில் ஆய்வு, செம்மொழித் தமிழ் நடுவண் நிறுவனம், சென்னை, 2012.
  • செம்மொழித் தமிழ் நூல்களில் தொன்மக் கூற்றுக்களும் அவற்றின் கலை வடிவங்களும், செம்மொழித் தமிழ் நடுவண் நிறுவனம், சென்னை,2015–16 (நடைபெறுகிறது)

விருதுகள்

தொகு
  • குறள்நெறிச் செம்மல், உலகத் திருக்குறள் பேரவை, தஞ்சாவூர், 2003
  • திருவருட் செம்மணி, சிருவபுரி முருகன் அபிஷேகக்குழு, 2005
  • திருக்கோயில் ஆய்வுப்பேரொளி, அறுபத்துமூவர் மன்றம், தஞ்சாவூர், 2005
  • ராஜராஜசோழன் விருது, ராஜராஜன் கல்வி மற்றும் பண்பாட்டு மையம், சென்னை, 2007
  • கரிகால் சோழன் விருது, தமிழ் அய்யா கல்விக்கழகம், திருவையாறு, 2009
  • வரலாற்று நாயகர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2011
  • வாழ்நாள் சாதனையாளர் விருது, சங்கீத் சாகர் மற்றும் ரஷிய அறிவியல் பண்பாட்டு மையம், சென்னை 2012
  • ராஜராஜசோழன் விருது, சதய விழாக்குழு, தஞ்சாவூர், 2012
  • ஆனந்த குமாரசுவாமி கவின்கலை விருது, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், சென்னை, 2013
  • திருக்கோயில் கலைச்செல்வர் விருது, தருமபுரம் ஆதீனம், 2013
  • மண்ணின் சிறந்த படைப்பாளி, ரோட்டரி கிளப், தஞ்சாவூர், 2014
  • ஆய்வுரை வித்தகர், அப்பர் அறக்கட்டளை, 2014
  • உவேசா தமிழறிஞர் விருது, தமிழ்நாடு அரசு, 2015
  • சேக்கிழார் தமிழறிஞர் விருது, சேக்கிழார் ஆய்வு மையம், சென்னை, 2015
  • பொற்றாமரை விருது, சிறந்த ஆய்வாளர், 2015

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ் இலக்கிய களஞ்சியம். 1987. pp. [1432].
  2. Special convocation at SASTRA university, The Hindu, 18 பிப்ரவரி 2016
  3. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=373
  4. பெரியகோவிலில் அக்டோபர் 27,2012 தினமலர் கோயில்கள்
  5. "Thanjavur Tamil book". discoverybookpalace.com. Archived from the original on 2014-06-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-01.
  6. குடவாயில் பாலசுப்ரமணியன் (2004). கோபுரக்கலை மரபு. கோயிற் களஞ்சியம் , தஞ்சாவூர் - 613 007. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
  7. "Voyage of discovery - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.
  8. "குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய நூல் வெளியீடு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2018-10-07.
  9. நூல் அரங்கம், தினமணி, 20 ஜனவரி 2020
  10. தினமணி, நூல் அரங்கம், 14 டிசம்பர் 2020
  11. தினமணி, நூல் அரங்கம், 1 பிப்ரவரி 2021
  12. வரப்பெற்றோம், தினமணி, 22 பிப்ரவரி 2021
  13. கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள், இந்து தமிழ் திசை, 26 பிப்ரவரி 2021
  14. நூல் அரங்கம், தினமணி, 27 டிசம்பர் 2021
  15. நூல் அரங்கம், தினமணி, 3 ஜனவரி 2022

வெளி இணைப்புகள்

தொகு