குடவாயில் என்பது இக்காலத்தில் குடவாசல் என்னும் பெயருடன் திகழ்கிறது.
சங்ககாலத்தில் பெரும்பூட்சென்னி என்பவன் ஆட்சிக்குட்பட்டிருந்த அழும்பில், குடவாயில் ஆகிய இரு ஊர்களும் நெல்வயல்களுடன் இன்பம் நல்கும் ஊர்களாகத் திகழ்ந்தன.
தன் காதலியின் மார்பகம் தண்குடவாயில் போல் இன்பம் தரும் என்கிறான் காதலன்.
இந்தச் செய்தி உள்ள பாடலைப் பாடியவர் குடவாயிற் கீரத்தனார். இவரும் இந்த ஊரில் வாழ்ந்தவர்.
கட்டூர்ப் போரில் இந்தச் சென்னியின் படைத்தலைவன் எழுவர் கூட்டணியால் கொல்லப்பட்டபோது தானே எதிர் சென்று தாக்கிப் பகைவரை விரட்டிவிட்டு அகப்பட்ட கணையன் என்பவனைச் சிறைபிடித்துவந்து தன் கழுமலத்தில் சிறைவைத்தவன் இந்தச் சென்னி அரசன்.[1]

அடிக்குறிப்பு தொகு

  1. அகநானூறு 44
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடவாயில்&oldid=880163" இலிருந்து மீள்விக்கப்பட்டது