கழுமலம்
கழுமலம் என்பது சங்க கால ஊர் ஆகும்.
சோழ நாட்டுக் கழுமலம்
தொகு- தமிழ்நாட்டிலுள்ள சீர்காழிக்கு வழங்கும் பெயர்களில் ஒன்று கழுமலம். ஞானசம்பந்தர் தேவாரத்தில், கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளோடும் பெருந்தகை இருந்ததே என்று கூறுகிறார்.திருக்கோயிலூர் தென்பெண்ணை ஆற்றில் கரையோரம் உள்ள ஊர் கழுமலம். இன்றும் இந்த ஊர் கழுமலம் என்றே அழைக்கப்படுகிறது.
- அழும்பில் அரசன் பெரும்பூட் சென்னி தன் படைத்தலைவன் பழையனை வீழ்த்திய எழுவர் கூட்டணியோடு தானே முன்னின்று போரிட்டு அகப்பட்ட கணையனைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்து சிறையிலிட்டான். [2]
சேர நாட்டுக் கழுமலம்
தொகு- சேரநாட்டில் ஒரு கழுமலம் இருந்தது. அதனை ஆண்டுவந்த அரசன் குட்டுவன். தலைவியின் மேனி இந்தக் கழுமலம் என்னும் ஊரைப்போல அழகுடன் திகழ்ந்ததாகக் கூறப்படுகிது. [3]
- களவழி நாற்பது பாட்டுடைத் தலைவன் சோழன் செங்கணான் கழுமலம் என்னும் ஊரில் நடந்த போரில் வென்றான்.
காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ "குடையொடு கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தை" - நற்றிணை 234-ம் பாடல் எனக் கருதப்படும் பிற்சேர்க்கைப் பாடல்.
- ↑ குடவாயிற் கீரத்தனார் அகநானூறு 44
- ↑ சாகலாசனார் - அகம் 270