சங்ககாலத் தண்டனை
சங்ககால அரசர்கள் போரில் பிடிபட்ட அரசர்களைச் சிறையிலிட்டுத் தண்டனை வழங்கியிருக்கிறார்கள்.
- போரில் பிடிபட்ட அரசன் சேரமான் கணைக்கால் இரும்பொறை நாயைப்போல் சங்கிலியால் பிணிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டுச் சிறையில் அடைக்கக்கப்பட்டு இருக்கிறான். சிறைக் காவலர்களும் அவனிடம் மனிதாபிமானம் கூடக் காட்டவில்லை.
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன்னை எதிர்த்த யவனரிடமிருந்த பொருள்களையெல்லாம் கவர்ந்துகொண்டு அவர்கள் தலையில் நெய் ஊற்றி வழிய வழிய இழுத்து வந்திருக்கிறான்.
- கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் மோகூர் அரசன் பழையன் போரில் தோற்றபோது அவனது காவல்மரம் வேம்பை வெட்டி, அதனைத் தனக்கு முரசு செய்துகொள்வதற்காகத் தன் நாட்டுக்குக் இழுத்துக் கொண்டு வர, போரில் மாண்ட பகைவீரர்களின் மனைவியரின் கலைந்த தலைமுடியைக் கயிறு திரிக்கப் பயன்படுத்தியிருக்கிறான்.
- அழும்பில் அரசன் பெரும்பூட் சென்னி தன் படைத்தலைவன் பழையனை வீழ்த்திய எழுவர் கூட்டணியோடு தானே முன்னின்று போரிட்டு அகப்பட்ட கணையனைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்து சிறையிலிட்டான்.
மக்கள் மன்றம் வழங்கிய தண்டனை
தொகு- சங்ககாலத்தில் கள்ளூர் மக்கள் மன்றம் பெண்ணைக் காதலித்துப் பழகியபின் இல்லையென்று மறுத்த குற்றம் செய்தவனை ஊர்மரத்திலே கட்டித் தலையில் சுண்ணாம்பு நீறு கொட்டித் தண்ணீர் ஊற்றி அவன் அழகை அழித்துத் தீர்ப்பு வழங்கித் தண்டித்திருக்கிறார்கள்
- அன்னி மிஞிலியின் தந்தை மாடு மேய்த்துக்கொண்டிருந்தான். அவன் சோர்ந்திருந்தபோது அவனது மாடு அடுத்தவர் விளைச்சலை மேய்ந்துவிட்டது என்பதற்குத் தண்டனையாக மேய்த்தவனின் கண்ணையே தோண்டும் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
- வரைவின் மகளிர் தவறு செய்தால் அவர் தலையில் சுட்ட ஏழு செங்கற்களை ஏற்றி ஊரைச் சுற்றிக் கொண்டு வருவர். [1] குற்றம் சுமத்தப்பட்டு தலையில் சுட்டமண் செங்கல் ஏற்றிக் கொண்டுவரப்படாத பொதுமகளிர் மதுரையில் வாழ்ந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [2]
மேற்கோள்
தொகு- ↑ "மற்றவன் றன்னால் மணிமே கலைதனைப், பொற்றேர்க் கொண்டு போதே னாகிற், சுடும ணேற்றி யாங்குஞ்சூழ் போகி, வடு வொடு வாழு மடந்தையர் தம்மோ, டனையே னாகி யரங்கக் கூத்தியர் மனையகம் புகாஅ மரபினள்" - சித்திராபதி கூற்று - மணிமேகலை - 18 உதயகுமரன் அம்பலம் புக்க காதை
- ↑ சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை - சிலப்பதிகாரம் - ஊர்காண் காதை