பெரும்பூட் சென்னி
சென்னி என்பது சோழனின் குடிப்பெயர்களில் ஒன்றாகும். பெரும்பூட் சென்னி என்பவன் சென்னி என்னும் குடிப்பெயர் பூண்ட சோழ மன்னர்களில் ஒருவனாவான்.
- அழும்பில் அரசன் பெரும்பூட் சென்னி தன் படைத்தலைவன் பழையனை வீழ்த்திய எழுவர் கூட்டணியோடு தானே முன்னின்று போரிட்டு அகப்பட்ட கணையனைக் கழுமலத்துக்குக் கொண்டுவந்து சிறையிலிட்டான்.[1]
- பெரும்பூட் சென்னி, இளஞ்சேரல் இரும்பொறையுடன் போரிட்டபோது தன் வேலைப் போர்க்களத்திலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டான்.[2]
அடிக்குறிப்பு
தொகு- ↑ குடவாயிற் கீரத்தனார் அகநானூறு 44
- ↑ பெரும்பூண் ஒன்னார்ப் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வென்வேல் – பதிற்றுப்பத்து 85