தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (நூல்)

தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு, குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூலாகும். தஞ்சையை ஆண்ட நாயக்கர்களின் [1] வரலாற்றைப் பற்றி இந்நூல் விரிவாக ஆராய்கிறது. தஞ்சையை சோழர்கள் முதல் நூற்றாண்டில் இருந்து 12ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் 90 கோயில்களை கட்டியுள்ளனர். அதன் பின் முத்தரையர்களும், 16ம் நூற்றாண்டில் நாயக்கர்களும்[2], 17,18ம் நூற்றாண்டுகளில் மராத்தியர்களும் ஆட்சி புரிந்த போதிலும் சோழர்களின் காலம் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (கி.பி.1535-1675)
நூல் பெயர்:தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு (கி.பி.1535-1675)
ஆசிரியர்(கள்):குடவாயில் பாலசுப்ரமணியன்
வகை:வரலாறு
துறை:நாயக்கர் வரலாறு
இடம்:தஞ்சாவூர்
மொழி:தமிழ்
பக்கங்கள்:406
பதிப்பகர்:தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம்
பதிப்பு:முதல் பதிப்பு
1999
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

அமைப்பு

தொகு

இந்நூல் 10 தலைப்புகளையும், பின்னிணைப்புகளையும் கொண்டு அமைந்துள்ளது.

தலைப்புகள்

தொகு

நாயக்கர் அரசு உதயம், முதல் நாயக்க மன்னர், தஞ்சை செவ்வப்ப நாயக்கர், அவரது காலத்துக் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள், அச்சுதப்ப நாயக்கர் - இரகுநாத நாயக்கர் இணைந்த ஆட்சி, இரகுநாத நாயக்கர், இராமபத்ர நாயக்கர், கோவிந்த தீட்சிதர், விஜயராகவ நாயக்கர், தஞ்சை நாயக்கர் காலக் கோட்டையும் அரண்மனையும், தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியின் வரலாற்றுச் சுருக்கம் உள்ளிட்ட தலைப்புகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பின்னிணைப்புகள்

தொகு

விஜயராகவ நாயக்கரின் கையொப்பத்துடன் காணப்படும் அரிய செப்பேட்டுத்தொகுதி, தஞ்சாவூர் பள்ளிவாசல் கல்வெட்டு, படேவியா வெள்ளிப்பட்டயம், அரித்துவாரமங்கலம் செப்பேடு, மன்னார் மோகனப்பள்ளு, அருவிழி மங்கலம் செப்பேட்டுத் தொகுதி, விஜயராகவ நாயக்கரின் வெள்ளிப்பட்டயம் உள்ளிட்ட பல ஆவணங்கள் பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

ஆதாரங்கள்

தொகு