அம்பை மணிவண்ணன்

அம்பை மணிவண்ணன் என்பவர் இந்து சமயக் கோயில்கள் சார்ந்த தமிழ் நூல்களை எழுதி வரும் எழுத்தாளர். தேனி மாவட்டம், அம்பாசமுத்திரம் எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். இவர் தமிழ், வரலாறு பாடங்களில் முதுகலைப் பட்டங்களையும், தமிழில் முதுமுனைவர் பட்டத்தையும் பெற்றவர். மதுரை மாவட்டம், மேலூர் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர் கோயிற்கலை மற்றும் சமயம் தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். ஆய்வு நூல்களாகவும் சில நூல்களை வெளியிட்டுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள் தொகு

  1. பாண்டிய நாட்டு வைணவக் கோயில்களின் கலையும் கட்டடக் கலையும் (முதற்பதிப்பு - 1999, இரண்டாம் பதிப்பு - 2000)
  2. கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் (டிசம்பர் 2000)
  3. பொற்றாமரை (2010)

பரிசுகள் தொகு

இவர் எழுதிய பொற்றாமரை எனும் நூல் தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக தேர்வு செய்யப் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் இவருக்குப் பரிசு வழங்கப் பெற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பை_மணிவண்ணன்&oldid=3826076" இலிருந்து மீள்விக்கப்பட்டது