ம. லெனின் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வணிகவியல், இதழியல் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழில் பல சுய முன்னேற்ற நூல்களை எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது தொகு

இவர் எழுதிய இவர் எழுதிய ஐந்து நூல்கள் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

  1. இவர் எழுதிய "இனி எல்லாம் இண்டர்நெட்! " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பொறியியல், தொழில்நுட்பவியல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது.
  2. இவர் எழுதிய “ஐ.டி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுநராகுங்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  3. இவர் எழுதிய “எல்லாம் தரும் இதழியல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  4. இவர் எழுதிய“எளிய தமிழில் எக்ஸெல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிணியியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.
  5. இவர் எழுதிய“வேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._லெனின்&oldid=3614162" இலிருந்து மீள்விக்கப்பட்டது