இரத்தினபுரி

சபரகமுவா மாகாணத்தின் தலைநகரம்

இரத்தினபுரி (சிங்களம்: රත්නපුර , ஆங்கிலம்: Ratnapura) இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றும், சபரகமுவா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இரத்தினபுரி என்பது இந்நகரம் அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டத்தையும் இதன் நிர்வாக அலகான இரத்தினபுரி பிரதேச செயளர் பிரிவையும் குறிக்கும். கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

இரத்தினபுரி

இரத்தினபுரி
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°42′00″N 80°22′52″E / 6.7°N 80.381°E / 6.7; 80.381
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 100 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
நகரத் தந்தை
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70000
 - +9445
 - SAB

பெயர் தோற்றம்

தொகு

இரத்தினபுரி என்ற பெயர், இங்கு உற்பத்தி செய்யப்படும் கித்துள் மரத்தின் வெல்லத்துக்கான போர்த்துக்கேய மொழி பதமான "இராபாதுரா" என்பதில் இருந்து தோன்றியதாகும். எவ்வாராயினும் பிரபலமான பெயர் தோற்றம் "இரத்தினம்" + "புரம்" அல்லது இரத்தினங்களின் நகரம் எனற பெயர் தோற்றமாகும். இது இங்கு காணப்படும் இரத்தினக்கல் கைத்தொழிலுக்கு இசைவாக உள்ளதால் பிரபலமடைந்துள்ளது.[1]

அரசியல்

தொகு

மாநகரமானது மாநகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இச்சபை 15 ஆசனங்களைக் கொண்டுள்ளது. 2006 உள்ளூராட்சி தேர்தலின் போது 29159 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் இரத்தினபுரி மாநகரக எல்லைக்குள் இருந்தனர்.[2]

பொருளாதாரம்

தொகு

இரத்தினக்கல் வியாபாரம்

தொகு

இரத்தினபுரி நகரின் பொருளாதாரம் இரத்தினக்கல் வியாபாரத்தில் பாரிய அளவில் தங்கியுள்ளது. இலங்கையின் முன்னணி இரத்தினக்க்ல வியாபாரிகள் இரத்தின்ப்புரி நகரை தளமாக கொண்டுள்ளனர். வெளிநாட்டவர்களுன் இங்கு இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் தாய்லாந்தைச் சேர்ந்தவர்களாவர். இரத்தினக்கல் அகழ்வுக் குழிகளை நகரைச் சுற்றியப்பகுதிகளில் காணலாம். ஒவ்வொருநாள் காலையில் நகரின் மையத்தில் இரத்தினக்கல வியாபாரம் நடைபெறும். வெளிப்பகுதிகளில் இருந்தும் இரத்தினக்கல் வியாபாரத்துக்கு அதிகளவானோர் வருகின்றனர். மடகாஸ்கர் நாடில் உயர்தரத்திலான இரத்தினக்கற்களில் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து நகரின் வியாபாரிகள் இரத்தினக்கல் வியாபாரத்துக்காக மடகஸ்கார் செல்கின்றனர்.[3]

விவசாயம்

தொகு

இந்த நகரம் விவசாயம் சார்ந்த தொழில்களும் நன்றாக முன்னேறியுள்ளன. தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்கள் இந்நகரத்தை சுற்றி காணப்படுகின்றன. ஒரு காலத்தின் இந்நகரத்தை சுற்றியும் எங்கு நோக்கினும் நெல் வயல்களாக இருந்தது. எனினும் தற்காலத்தில், பல விவசாயிகள் நெல் சாகுபடியை விடுத்து ரத்தின சுரங்க வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால், இந்நகரத்தின் நெல் சாகுபடி மிகவும் இக்கட்டான நிலையில் காணப்படுகிறது. மாம்பழம் மற்றும் பப்பாளி போன்ற பழங்களும் பல காய்கறிகளும் சந்தை விற்பனைக்காக இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.

காலநிலை

தொகு

இரத்தினபுரி ஈர மண்டலம் என அழைக்கப்படும் இலங்கையில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென் மேற்கு பருவமழையின் மூலமாக பெரும்பாலும் மழையினை பெறுகிறது. வருடத்தின் பிற மாதங்களில், வெப்பசலன மழையினை(Convective Rainfall) பெறுகிறது. இதானல் நிகழும் வருடாந்திர மழைப்பொழிவு 4,000 மீ.மீ முதல் 5,000 மி.மீ ஆகும். சராசரின் வெப்பநிலை 24 முதல் 30 டிகிரீ செல்சியஸ் வரை வேறுபடும். மேலும் மிகவும் ஈரப்பதம் நிறைந்த பகுதியாக இரத்தினபுரி விளங்குகிறது[4]

மாதம் சன பெப் மார் ஏப் மே யூன் யூலை ஆக செப் அக் நவ டிச ஆண்டு
சார.வெப். °C
(°F)
27
(81)
28
(83)
29
(84)
28
(83)
28
(83)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
27
(81)
மழைவீழ்ச்சி cm 13 12 23 36 45 34 30 22 35 50 38 21 359

மூலம்:[5][6]

வெள்ளப்பெருக்குகள்

தொகு

இரத்தினபுரி நகரம் காலு (Kalu) ஆற்றின் வெள்ளப்பெருக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஆகவே, பொதுவாக மே மாதத்தில் இந்நகரம் வெள்ளப்பெருக்கால் அவதிப்படும். மேலும், இந்த ஆற்றை சுற்றி அணை ஏதும் கட்டப்படாததால், ஒவ்வொரு வருடமும் இயற்கையின் சீற்றத்துக்கு ஆளாக வேண்டிய நிலையில் இந்நகரம் உள்ளது. வெள்ளப்பெருக்கை தடுக்க பல திட்டங்களை முன்வைக்கப்பட்ட போதிலும், எந்த திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இலங்கை சுதந்திரம் பெற்ற ஆண்டில் இருந்து இது வரை சந்திக்காத மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை மே 2003 அன்று சந்தித்தது.

வழிபாட்டிடங்கள்

தொகு
 
இரத்தினபுரி பிரதேச செயளர்பிரிவு

இந்நகரத்தை சுற்றி பல வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவ்விடத்தில் பௌத்தர்கள் பெரும்பாண்மையினராக உள்ளதால், பௌத்த வழிபாட்டு தலங்களை மிக அதிகமாக காணப்படுகின்றன. இருந்தாலும் கூட, பிற மதங்கள் சார்ந்த வழிபாட்டு தலங்களும் ஏராளமாக உள்ளன. அவற்றும் முக்கியமானவை:

  • மகா சமன் தேவாலயம் (பௌத்த)
  • தூய பீட்டர்-பவுல் தேவாலயம் (கத்தோலிக்க)
  • தூய லக் (இங்கிலாந்து தேவாலயம்)
  • சிவன் கோவில் (இந்து)
  • ஜும்மா மசூதி (இஸ்லாம்)

மகா சமன் தேவாலயம்

தொகு

இந்த இடம், பௌத்த தேவதாமூர்த்தியான சமனுக்கு உரிய இடம் ஆகும். சமன் இரத்தினபுரியின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இரத்தினபுரியை போர்த்துகீசியர் கைப்பற்றிய போது, இந்த தலத்தில் இருந்த புராதன சமன் கோயிலை இடித்து, அதன் மீது போர்த்துகீசிய தேவாலயத்தை நிர்மாணித்தனர். கண்டி அரசு, இரத்தினபுரியை மீண்டும் மீட்டெடுத்த போது, போர்த்துகீசிய தேவாலயத்தை இடித்துவிட்டு மறுபடியும் சமன் ஆலயத்தை கட்டினர். பழைய பௌத்த ஆலயம் இருந்ததற்கான நேரடி ஆதாரங்காள் இல்லை.போர்த்துகீசியர் வருகைக்கும் முன்பு இந்து ஆலயத்தை போன்ற தோற்றத்துடன் இந்த ஆலயம் இருந்ததற்கான மறைமுக ஆதாரங்கள் காணப்படுகின்றன. தற்சமயம், இந்த தலம் பௌத்தர்களின் மிக முக்கியமான வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது[7]

புனித.இராயப்பர் சின்னப்பர் பேராலயம்

தொகு
 
புனித.இராயப்பர் சின்னப்பர் பேராலயம்

இரத்தினபுரியில் கத்தோலிக்கரது வரலாறு இப்பகுதியை போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்திடமிருந்து கைப்பற்றியப் பின்னர் தொடங்கியது. 17 ஆம் நூற்றாண்டில் வெகு சில கத்தோலிக்கரே இங்கு வசித்து வந்தனர். அவர்களுள் பெரும்பான்மையினர் போர்த்துக்கேயர் அல்லது போர்த்துக்கேயரை திருமணம் செய்த இலங்கையர்களாக காணப்பட்டனர். போர்த்துக்கேயர் இப்பகுதியில் காணப்பட்ட பௌத்த/இந்து தேவாலயம் ஒன்றை இடித்து அதன்மீது ஒரு கத்தோலிக்க ஆலயத்தைக் கட்டியதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவ்வாலயம் மீண்டும் இப்பகுதி கண்டி இராச்சியத்தால் கைப்பற்றப்பட்டப் போது இடிக்கப்பட்டது. தற்போதைய புனிதஇராயப்பர் சின்னப்பர் ஆலயம் இடம் மாற்றப்பட்டு நகரின் மத்தியில் அமைந்த மேட்டுநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாலயம் "இலங்கையின் அப்போஸ்தலர்" என அழைக்கப்படும் முத்திபேறு பெற்ற யோசப் வாஸ் அடிகளால் ஆரம்பிக்கப்பட்தாக கருதப்படுகிறது. 2 நவம்பர் 1995 இல் இரத்தினபுரி இலங்கையில் ஒரு கத்தோலிக்க மறைமாவட்டமாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாலயம் பேராலயமாக மாற்றப்பட்டது.[8]

முக்கிய நிறுவனங்கள்

தொகு

தேசிய நூதனசாலை

தொகு

இலங்கை தேசிய நூதனசாலையின் கிளையொன்று இரத்தினபுரி நகரில் அமைந்துள்ளது. இது இரத்தினபுரி - கொழும்பு பெருந்தெருவில் அமைந்துள்ள எகலபொல வளவு என அழைக்கப்படும் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இது 1988 மே 13 முதல் இயங்கி வருகின்றது. இங்கு இப்பிரதேசத்தில் அகழ்தெடுக்கப்பட்ட சரித்திரத்திற்கு முற்பட்டகால தொல்பொருளியற் பொருட்கள், இப்பிரதேசத்தின் இயற்கை விஞ்ஞான மரபுரிமைகள், பூகற்பவியல், மானிடவியல் மற்றும் விலங்கியல் தொடர்பான மாதிரிகள் என்பன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து

தொகு

இரத்தினபுரி நகரை கொழும்பில் இருந்து AA4 பெருந்தெருவூடாக அவிசாவளை, எகலியகொடை, குருவிட்டை நகரங்கள் ஊடாக அணுகலாம். பேருந்துச் சேவைகள் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும், மல்வத்தை தனியார் பேருந்து நிலையத்தில் இருந்தும் செயற்படுகின்றன.

பேருந்து

தொகு

தனியார் மற்றும் அரச பேருந்துச் சேவைகள் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றன. மேலும் இரத்தினபுரி நகரமூடாக செல்லும் தூரச்சேவை பேருந்துகளும் மத்திய பேருந்து நிலையத்தில் தரித்தே செல்கின்றன. இரத்தினபுரி மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து வடமாகாணத்தை தவிர்ந்த நாட்டின் ஏனைய எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்துச் சேவைகள் நடைபெறுகின்றன. காலை 4 மணி முதல் மாலை 8 மணி வரை கொழும்புக்கு 15 நிமிடத்துக்கு ஒரு பேருந்துச் சேவை காணப்படுகிறது. கண்டி, காலி அம்பாந்தோட்டை, கல்முனை, அம்பாறை பதுளை போன்ற நகரங்களுக்கு 1 மணித்தியாலத்துக்கு ஒரு பேருந்துச் சேவை நடைபெறுகின்றது.

தொடருந்துச் சேவை

தொகு

2006 ஆம் ஆண்டு இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவிசாவளை வரைக் காணப்படும் களனிப் பல்லத்தாக்கு தொடருந்துப்பாதையை இரத்தினபுரி நகரம் வரை நீடிப்பதற்கான திட்டத்தை திறந்து வைத்தார்.

சுற்றுலாத்தளங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Ariyaratna, D. H., President of the Sri Lanka Gem Association of the UK, Gems of Sri Lanka, 6th revised edition, 2006, self-published, p. 31.
  2. இலங்கை தேர்தல் திணைக்களம்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. இலகாகா, மடகஸ்கர் இரத்தினக்கற்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. காலநிலை
  5. வெப்பநிலை
  6. மழைவீழ்ச்சி
  7. "சமன் தேவலயம் இரத்தினபுரி". Archived from the original on 2003-06-06. பார்க்கப்பட்ட நாள் 2006-06-13.
  8. கத்தோலிகக் திருச்சபை இரத்தினபுரி

உசாத்துணை

தொகு


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினபுரி&oldid=3851874" இலிருந்து மீள்விக்கப்பட்டது