வெளிகேபொலை

6°34′0.12″N 80°42′0″E / 6.5667000°N 80.70000°E / 6.5667000; 80.70000

வெளிகேபொலை

வெளிகேபொலை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°34′00″N 80°42′00″E / 6.5667°N 80.7°E / 6.5667; 80.7
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 377 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
28904
பிரதேச சபை தலைவர்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70138
 - ++9445
 - SAB

வெளிகேபொலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.வெளிகேபொலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

தொகு

வெளிகேபொலை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 377 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

தொகு

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 28904 28565 165 161 2 3 8
கிராமம் 28525 28483 27 10 2 3 1
தோட்டப்புறம் 379 82 138 151 0 0 14

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 28904 28571 300 3 12 11 7
கிராமம் 28525 28477 23 3 10 11 1
தோட்டப்புறம் 379 94 277 0 2 0 6

கைத்தொழில்

தொகு

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

அரசியல்

தொகு

2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: வெளிகேபொலை பிரதேசசபை

கட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12291 51.36 6
ஐக்கிய தேசியக் கட்சி 9537 39.85 3
மக்கள் விடுதலை முன்னணி 1643 6.87 -
ஏனைய 459 1.92 -
செல்லுபடியான வாக்குக்கள் 23930 95.52% -
நிராகரிக்கப்பட்டவை 1122 4.48% -
அளிக்கப்பட்ட வாக்குகள் 25052 64.7% -
மொத்த வாக்காளர்கள் 38720 ** -

மூலம்:[1]

குறிப்புகள்

தொகு
  1. மூலம்[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணைகள்

தொகு


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெளிகேபொலை&oldid=3372517" இலிருந்து மீள்விக்கப்பட்டது