நிவித்திகலை

இலங்கையில் உள்ள இடம்

6°36′0″N 80°27′19.″E / 6.60000°N 80.45528°E / 6.60000; 80.45528

நிவித்திகலை

நிவித்திகலை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°36′00″N 80°27′19″E / 6.6°N 80.4553°E / 6.6; 80.4553
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 114 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
58412
பிரதேச சபை தலைவர்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70043
 - +9445
 - SAB

நிவித்திகலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.நிவித்திகலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் இப்பகுதி நிர்வகிகப்படும் பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும் தொகு

நிவித்திகலை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 114 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள் தொகு

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 58412 46842 4648 6347 493 14 68
கிராமம் 47683 45197 1058 957 419 12 26
தோட்டப்புறம் 10729 1645 3590 5390 74 2 9

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 58412 46898 9955 657 541 349 12
கிராமம் 47683 45229 1808 482 79 79 6
தோட்டப்புறம் 10729 1669 8147 175 462 270 6

கைத்தொழில் தொகு

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.

அரசியல் தொகு

2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: நிவித்திகலை பிரதேசசபை

கட்சி வாக்குகள் சதவீதம் ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 24,320 63.90 9
ஐக்கிய தேசியக் கட்சி 10,147 26.66 3
மக்கள் விடுதலை முன்னணி 2,700 7.09 1
ஏனைய 890 2.35 -
செல்லுபடியான வாக்குக்கள் 38057 94.61% -
நிராகரிக்கப்பட்டவை 2168 5.39% -
அளிக்கப்பட்ட வாக்குகள் 40225 68.95% -
மொத்த வாக்காளர்கள் 58337 ** -

மூலம்:[1]

குறிப்புகள் தொகு

  1. மூலம்[தொடர்பிழந்த இணைப்பு]

உசாத்துணைகள் தொகு


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவித்திகலை&oldid=3370355" இலிருந்து மீள்விக்கப்பட்டது