ஒபநாயக்கா இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.ஒபநாயக்கா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.

ஒபநாயக்கா

ஒபநாயக்கா
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°36′46″N 80°37′10″E / 6.6128°N 80.6194°E / 6.6128; 80.6194
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 239 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
25221
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70080
 - ++9445
 - SAB

புவியியலும் காலநிலையும்

தொகு

ஒபநாயக்கா சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 239 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

தொகு

இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய
மொத்தம் 25221 23085 442 1455 215 14 10
கிராமம் 22969 22579 49 105 213 14 10
தோட்டப்புறம் 2252 506 393 1350 2 0 0

2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 25221 23052 1686 236 201 40 6
கிராமம் 22969 22541 120 231 45 26 6
தோட்டப்புறம் 2252 511 1566 5 156 14 0


கைத்தொழில்

தொகு

இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.

குறிப்புகள்

தொகு


உசாத்துணைகள்

தொகு


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒபநாயக்கா&oldid=2577289" இலிருந்து மீள்விக்கப்பட்டது