குருவிட்டை

இலங்கையின் சப்பிரகமுவா மாகாணத்தில் அமைந்துள்ள நகரம்

6°46′45″N 80°22′07″E / 6.77917°N 80.36861°E / 6.77917; 80.36861

குருவிட்டை

குருவிட்டை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - இரத்தினபுரி
அமைவிடம் 6°46′48″N 80°22′05″E / 6.780°N 80.368°E / 6.780; 80.368
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 100 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2001)
85,343
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 70500
 - +9445
 - SAB

குருவிட்டை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும் (கிராமம்) மேலும் இங்கு காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் குருவிட்டை ஆகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரிக்கு வடமேற்குத் திசையில் 15 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இந்நகரமானது கொழும்பையும், கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கும் ஏ4 பெருந்தெருவில் 85 கி.மீ. தூரத்தில் காணப்படுகிறது. சிவனொளிபாத மலைக்குச் செல்லும் ஒரு பாதை இந்நகரத்தினூடாக அமைந்துள்ளது மேலும் அம்மலையிலிருந்து ஊற்றெடுக்கும்,களுகங்கையின் கிளையாரான, குருகங்கை பாய்கின்றது. இலங்கை சிறைச்சாலை திணைக்களத்தின் ஒரு சிறைச்சாலை இங்க் அமைந்துள்ளது.

புவியியலும் காலநிலையும்

தொகு

இது இலங்கையின் புவியியல் பிரிவான சபரகமுவா குன்றுகளில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 91 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேல் பருவக்காற்றின் மூலம் கிடைக்கிறது, 3500-5000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.

மக்கள்

தொகு

இது சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேசமாகும். நகரைசுற்றி காணப்படும் பிரதேசங்களிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். இலங்கை மக்கள் தொகை மற்றும் ஏனைய கணிப்பீடுகளில் குருவிட்டை நகரமாக கணிக்கப்படாது கிராமிய சனத்தொகையாகவே கணக்கிடப்படுகிறது.

இன அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் பின்வருமாறு:

பிரிவு மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் முஸ்லிம்கள் பரங்கியர் ஏனைய[1]
மொத்தம் 85,343 78,009 1,103 4,493 1,657 33 48
கிராமிய 80,026 77,003 685 833 1,426 33 46
தோட்டப்புரம்[2] 5,317 1,006 418 3,660 231 0 2

சமய அடிப்படையிலான சனத்தொகைப் பரம்பல் வருமாறு:

பிரிவு மொத்தம் பௌத்தர் இந்து இஸ்லாம் கத்தோலிக்கம் ஏனைய கிறிஸ்தவம் ஏனைய
மொத்தம் 85,343 77,777 4,563 1,833 819 290 61
Rural 80,026 76,790 1,097 1,652 349 127 11
தோட்டப்புரம்[2] 5,317 987 3,466 181 470 163 50

கைத்தொழில்

தொகு
 
குருவிட்டை பிரதேச செயளர்பிரிவு

இங்கு நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.

இரத்தினகல் கைத்தொழில் மற்றும் வியாபாரத்துக்கு பிரசித்தமான இலங்கையின் நகரங்கள்:

குறிப்புகள்

தொகு
  1. மலே, இலங்கைச் செட்டி, இந்தியர் உட்பட
  2. 2.0 2.1 தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வசிப்பவர்கள்

உசாத்துணைகள்

தொகு


இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள்  
மாநகரசபைகள் இரத்தினபுரி
நகரசபைகள் பலாங்கொடை | கேகாலை
சிறு நகரங்கள் அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருவிட்டை&oldid=3890203" இலிருந்து மீள்விக்கப்பட்டது