கலவானை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
6°32′12.84″N 80°24′28.08″E / 6.5369000°N 80.4078000°E
கலவானை | |
மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - இரத்தினபுரி |
அமைவிடம் | 6°32′13″N 80°24′28″E / 6.5369°N 80.4078°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 292 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) |
48201 |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 70450 - +9445 - SAB |
கலவானை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.கலவானை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் நிர்வாக அலகான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது.
புவியியலும் காலநிலையும்
தொகுகலவானை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 292 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
தொகுஇது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 48201 | 40322 | 0 | 7747 | 87 | 0 | 45 |
கிராமம் | 44296 | 39625 | 0 | 4551 | 79 | 0 | 28 |
தோட்டப்புறம் | 3905 | 697 | 0 | 3196 | 8 | 0 | 11 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
---|---|---|---|---|---|---|---|
மொத்தம் | 48201 | 40758 | 6726 | 160 | 266 | 259 | 32 |
கிராமம் | 44296 | 39957 | 3874 | 147 | 117 | 180 | 21 |
தோட்டப்புறம் | 3905 | 801 | 2852 | 13 | 149 | 79 | 11 |
கைத்தொழில்
தொகுஇங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது.
அரசியல்
தொகு2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கொலொன்னை பிரதேசசபை
கட்சி | வாக்குகள் | சதவீதம் | ஆசனங்கள் |
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி | 10,722 | 53.86 | 6 |
ஐக்கிய தேசியக் கட்சி | 7,222 | 36.28 | 2 |
மக்கள் விடுதலை முன்னணி | 1,904 | 9.56 | 1 |
ஏனைய | 59 | 0.31 | - |
செல்லுபடியான வாக்குக்கள் | 19907 | 95.78% | - |
நிராகரிக்கப்பட்டவை | 877 | 4.22% | - |
அளிக்கப்பட்ட வாக்குகள் | 20784 | 74.65% | - |
மொத்த வாக்காளர்கள் | 27842 | ** | - |
மூலம்:[1]
குறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு
இலங்கை சபரகமுவா மாகாணத்தில் உள்ள நகரங்கள் | ||
மாநகரசபைகள் | இரத்தினபுரி | |
நகரசபைகள் | பலாங்கொடை | கேகாலை | |
சிறு நகரங்கள் | அயகம | இம்புல்பே | எகலியகொடை | எட்டியாந்தோட்டை | எம்பிலிபிட்டியா | எலபாத்தை | ஒபநாயக்கா | கரவனல்லை | கலவானை | காவத்தை | கித்துள்கலை | கிரியெல்லை | குருவிட்டை | கொடகவளை | கொலொன்னை | நிவித்திகலை | பெல்மதுளை | வெளிகேபொலை |