முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் (முந்தையப்பெயர்: ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம்) ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். இந்த நிறுவனமானது 1976 ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் நாள் குபெர்டினோ, கலிபோர்னியாவில் துவங்கப்பட்டது. கணினி மட்டுமின்றி ஐப்பாடு, ஐஃபோன் போன்ற நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் மற்றும் மாக் ஓ.எசு பணிசெயல் முறைமை, ஃபைனல் கட் ப்ரோ, ஐடியுன்ஸ், ஐலைஃப் போன்ற மென்பொருளையும் உருவாக்குகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாவும் (CEO), தவிசாளராகவும் ஸ்டீவ் ஜாப்ஸ் விளங்கினார்[3]. 2010 செப்டம்பர் கணக்கெடுப்பின் படி, உலகளவில் இந்நிறுவனத்தில் 49,400 பேர் வேலை செய்கிறார்கள்.

Apple Inc.
வகைபொது
நிறுவுகைஏப்ரல் 1, 1976 (1976-04-01)
நிறுவனர்(கள்)ஸ்டீவ் ஜொப்ஸ்
ஸ்டீவ் வாஸ்னயிக்
ரொனால்ட் வேய்ன்[1]
தலைமையகம்ஆப்பிள் கம்பஸ்
1 இன்பினிட் லூப்
குபெர்டினோ, கலிபோர்னியா
, ஐக்கிய அமெரிக்கா
அமைவிட எண்ணிக்கை317 விற்பனை நிலையங்கள். (2010 இன் கணக்கெடுப்பின் படி)[2]
சேவை வழங்கும் பகுதிஉலகம் பூராகவும்
முக்கிய நபர்கள்ஸ்டீவ் ஜொப்ஸ்
(தவிசாளர் and முதன்மை செயல் அதிகாரி)
தொழில்துறைகணினி வன்பொருள்
கணினி மென்பொருள்
நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள்
எண்ணிம விநியோகம்
உற்பத்திகள்
வருமானம்Green Arrow Up Darker.svg US$ 65.23 பில்லியன் (FY 2010)[2]
இயக்க வருமானம்Green Arrow Up Darker.svg US$ 18.39 பில்லியன்(FY 2010)[2]
இலாபம்Green Arrow Up Darker.svg US$ 14.01 பில்லியன் (FY 2010)[2]
மொத்தச் சொத்துகள்Green Arrow Up Darker.svg US$ 75.18 பில்லியன் (FY 2010)[2]
மொத்த பங்குத்தொகைGreen Arrow Up Darker.svg US$ 47.79 பில்லியன் (FY 2010)[2]
பணியாளர்49,400 (2010)[2]
துணை நிறுவனங்கள்Braeburn Capital
FileMaker Inc.
இணையத்தளம்www.apple.com

ஸ்டீவ் ஜாப்ஸ் , ரொனால்டு வாய்ன் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய நண்பர்களுடன் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை 1976 ஏப்.,1ல் தொடங்கினார். இந்நிறுவனம் பர்சனல் கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், "ஐ-பேட்', "ஐ-போன்'," ஐ-பாட்' உள்ளிட்ட தயாரிப்புகளில் தனிச்சிறப்பு பெற்றது. ஆப்பிள் நிறுவன கம்ப்யூட்டர்கள், "மேக் ஓஎஸ் எக்ஸ்' எனும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செயல்படுகின்றன. 1985ல் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகிய ஸ்டீவ் ஜாப்ஸ் , "நெக்ஸ்ட்' எனும் கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினார். 1996ல் ஆப்பிள் நிறுவனம், ஸ்டீவ் ஜாப்ஸைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

ஆப்பிள் என்ற பெயரிடக் காரணம்தொகு

ஸ்டீவ் ஜாப்ஸ் , பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்போது, தனது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அவருடைய சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அந்தத் தோட்டம் பார்த்திருக்கிறது. பிரென்னன் என்ற பெண்ணுடன் இவருக்குக் கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் காதலிக்கும் இடமும் இந்தத் தோட்டம் தான். அந்த வசந்த காலத்தை நினைவு கூரும் விதமாக, தனது நிறுவனத்திற்கு "ஆப்பிள்' என பெயர் சூட்டினார். நிறுவனம் ஆரம்பித்த பின்னரும், அந்தத் தோட்டத்திற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஜாப்ஸ்.

மேலும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிள்_நிறுவனம்&oldid=2814046" இருந்து மீள்விக்கப்பட்டது