கோபிநாத் முண்டே

கோபிநாத் பாண்டுரங்க முண்டே (Gopinath Pandurang Munde, 12 திசம்பர் 1949 - 3 சூன் 2014[1]) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமாவார். மே 26, 2014 அன்று பதவியேற்ற அமைச்சரவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்.மகாராட்டிர சட்டப் பேரவையின் உறுப்பினராக ஐந்து முறை (1980-1985, 1990-2009) இருந்துள்ளார். 1992-1995 ஆண்டுகளில் மகாராட்டிர சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 1995-1999இல் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[2] 2009ஆம் ஆண்டு 15ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் பா.ஜ.கவின் துணைத்தலைவராகப் பணியாற்றினார்.

கோபிநாத் முண்டே
கோபிநாத் முண்டே
ஊரக வளர்ச்சி அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 03 சூன் 2014
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ஜெய்ராம் ரமேஷ்
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2009
முன்னவர் செயசிங்ராவ் கெய்க்வாட் (தேசியவாத காங்கிரசு)
தொகுதி பீடு
தனிநபர் தகவல்
பிறப்பு 12 திசம்பர் 1949 (1949-12-12) (அகவை 70)
நாத்ரா சிற்றூர், பரலி, மகாராட்டிரம்
இறப்பு சூன் 3, 2014(2014-06-03) (அகவை 64)
புது தில்லி
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பிராத்ன்யா முண்டே
பிள்ளைகள் பங்கஜா, பிரீதம், யஷஸ்ரீ
இருப்பிடம் புது தில்லி
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து
இணையம் கோபிநாத் முண்டே வலைத்தளம்

இறப்புதொகு

2014ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் விமான நிலையம் செல்லும் வழியில் கார் விபத்துக்காரணமாக புதுடெல்லியில் காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார்.[3]

மேற்சான்றுகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபிநாத்_முண்டே&oldid=2339355" இருந்து மீள்விக்கப்பட்டது