வார்ப்புரு:துடுப்பாட்ட நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் சூன் 2014
- சூன் 29:
- இங்கிலாந்து தொடருக்கான இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்திய துடுப்பாட்ட அணி முன்னால் தலைவர் ராகுல் டிராவிட் ஆலோசனை வழங்குகிறார் (தமிழ் நியூஸ் பிபிசி )
- சூன் 25:
- இங்கிலாந்துகு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை துடுப்பாட்ட அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. (தினகரன்)
- பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் 20 வயதாகும் ருபாப் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன(ற்றிபுனே)
- சூன் 24:
- இந்து கடவுளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத இந்திய துடுப்பாட்ட வீரர் மகேந்திரசிங் தோனி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் கைது வாரண்டு பிறப்பித்தது.(எண் டிவி தெலுங்கு நியூஸ்),(டைம்ஸ் ஒப் இந்தியா)
- இந்திய துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரை கெளரவப்படுத்தும் வகையில் பிரிட்டனின் கிழக்கிந்திய நிறுவனம் அரிதான தங்க நாணயத்தை வெளியிட்டது.(தினமணி)
- சூன் 23:
- மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு எதிரான 2–வது தேர்வுத் துடுப்பாட்ட (டெஸ்ட்) போட்டியின் போது நியூசிலாந்து அணியின் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு சந்தேகத்திற்குரிய வகையில் இருந்ததாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர்.(கோ கிரிக்கெட்)
- சூன் 22:
- இலங்கை துடுப்பாட்ட அணியின் வீரர் திலகரத்ன டில்சான் வரும் திங்கட்கிழமை இங்கிலாந்துக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் பிராந்திய அணியில் விளையாடுவதற்காக இவர் இங்கிலாந்து நோக்கி புறப்படவுள்ளார்.(லங்கா ஸ்ரீ )
- தோனி தலைமையிலான இந்திய துடுப்பாட்ட அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து பயணமானது. முதல் டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஜூலை 9ம் தேதி தொடங்குகிறது.(டெக்கான் ஹெரல்ட்)
- தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கத்தின் 84–வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன் தொடர்ந்து 14–வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக நரசிம்மனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் (கோ கிரிக்கெட்)
- இங்கிலாந்து – இலங்கை துடுப்பாட்ட அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார் டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனை ஆகும். (டெலிக்ராப்)
- இங்கிலாந்து – இலங்கை துடுப்பாட்ட அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது(cricbuzz)
- சூன் 21:
- இலங்கைக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிரோட் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். (பிபிசி)
- சூன் 20:
- நியுசிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.(இஎஸ்பிஎன் கிரிகின்போ)
- சூன் 19:
- பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்தியாவின் வீரர் விராட் கோலி 868 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். தென் ஆப்பிரிக்கா வீரர் ஏ பி டி வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.(ஐசிசி)
- இந்தியா-வங்காளதேசம் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.(தினகரன்)
- ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஷோன் டைட், இந்திய அழகி மஷூம் சின்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.(தி இந்து)
- சூன் 18:
- ஆஸ்திரேலியத் துடுப்பாட்ட அணி சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இலங்கையை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனை, ஆஸ்திரேலியத் துடுப்பாட்டவாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. (தினத்தந்தி)
- உள்ளூர் டி20 துடுப்பாட்ட போட்டியில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வங்காளதேசத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் மொகமது அஷ்ரஃபுல் வங்கதேச துடுப்பாட்ட வாரியத்தால் 8 ஆண்டுகால தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.(தமிழ்பிபிசி)